உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

-

  • மறைமலையம் - 20

-

(18-23) கொழுமடல் அவிந்த குழூஉக்கொள் கைதை வான் சிதர் அளாய தேம்கமழ் ஆம்பல் - செழுமையான இதழ்விரிந்த கூட்டங் கொண்டதாழையினுடைய வெள்ளிய பூந்தாதுகள் கலந்த தேன்மணக்குஞ் செவ்வாம்பன்மலர்கள், நீறு உறு தழலே போலவும் நீறு பூத்த நெருப்பைப்போலவும், பால்கெழு குறுநடைப்புதல்வர் துவர் இதழ் போலவும் பால் ஒழுகுங் குறுகுறுவென்னுஞ் சிறுநடையினையுடைய புதல்வர்களின் சிவந்த வாயிதழ்களைப்போலவும், அறிவு இல் மாக்கட்கும் அறிவுபேதுறுக்கும் புனையாப் பொற்பின் - மெய்யறிவுபெறாத மக்கட்கும் அவரது உலகுணர்வினை மயக்குங் கையாற் புனைதல்செய்யாத இயற்கையினால், முறைமுறை சிறப்பவும் - ஒன்றின்மேலொன்றாய்ச் சிறந்துவிளங்கவும்;

தாழம்பூவின்

-

இதழ்களைவிடப் பெரிய வாயுஞ் செழியவாயுமிருத்தலின், ‘மட’ லெனவுங்

‘கொழு’

இதழ்கள்

ஏனைமலர்களின்

வெனவும்

ஆசிரியர்

தாழஞ்செடிகள்

அடைகொடுத்தோதினார்.

புதர்புதராயிருத்தலாற், 'குழூஉக்கொள் கைதை’ யெனப்பட்டது.

‘வால்' வான் எனத்திரிந்தது; 'வான்கதிர்திருமணி’ (புறம், 150) என்புழிப்போல.

‘தேங்கமழ்’ என்புழித் ‘தேன்' என்னுஞ்சொல் ஈறுகெட்டு வருமொழி வன்மைக்கேற்ப மென்மை மிக்கது. இது

“தேனென் கிளவி வல்லெழுத் தியையின்”

“மெல்லெழுத்து மிகினு மானமில்லை.” (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல், 45, 46) என்பவற்றாற் கொள்ளப்படும்.

தழல்

பால்

‘நீறுறுதழல்' என்பதில், நீறு கைதையின் பூந்தாது எனவும், ஆம்பலெனவுங்கொள்க; இங்ஙனமே D கைதைத்தாதெனவும், துவரிதழ் ஆம்பலெனவும் அதற்கடுத்த உவமையிலும் உணரற்பாற்று.

‘பால்கெழு துவரிதழ்' என்று கூட்டுக.

குழந்தைகள் குறுநடையின ரென்பதைப் பாண்டியன் அறிவுடை நம்பியுங் ‘குறுகுறு நடந்து சிறுகைநீட்டி’ எனப் புறத்திற் (188) கூறினார். துவர், சிவப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/149&oldid=1586893" இலிருந்து மீள்விக்கப்பட்டது