உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

66

125

‘மாக்கள்” என்பார் மக்களுட் பகுத்தறிவு இல்லாதவர்; மரபியலுரைகாரர் மாவுமாக்களும் ஐயறிவினவே". (தொல்காப்பியம், மரபியல், 32) என்னும் நூற்பாவுக்கு உரை கூறுகின்றுழி “மாக்களெனப்படுவார் மனவுணர்ச்சி யில்லாதார்’ என்று உரைப்பர். இனி 'அறிவுபேதுறுக்கு' மென்பது அத்தகைய மாக்களுக்கு உலகியற்பொருள்களையுணரும் பொறியுணர்வே உளதாகலின், அவர்க்கு அவ்வுலகியலுணர்வினையும் மயக்குமென்பதாம். எவ்வாறெனின், கைதையந் தாது படிந்த செவ்வாம்பன் மலர் சிவபிரானது நீறுபூத்த தழலுருவத்தை அவர்க்கு நினைப்பூட்டனமையின் ‘மாக்கட்கும்' என்பதன் உம்மை இழிவு சிறப்பு.

இயற்கைத் தோற்றத்திற் காணப்படும் அழகு மக்கள் கையாற் புனையப்படாத தகாலிற் “புனையாப் பொற்பு" என்றார்; மேற் கூறிய நெய்தல் நில அழகுகள் புனையாப் பொற்பின என்றபடி.

(24-26) நெய்தல் சான்ற கைதை அம் கானல் ஒற்றியூர் அமர்ந்த வெற்றிவேல் குரிசில் - இவ்வாறாக நெய்தனிலத்தின் அழகு நிறைந்த தாழைகள் வாய்ந்த கடற்கரையினை யுடைய திருவொற்றியூ ரென்னுந் திருப்பதியில் திருக்கோயில் கொண் டெழுந்தருளியவெற்றி மிக்க வேற்படையினைத் தாங்கிய செம்மலே! கொன் ஒன்று கிளக்குவென் கேண்மதி பெரும! பெருமையானதோர் ஒப்புமைச் செய்தி சொல்லுவேன் கேட்டருள்க, பெருமானே;

'கைதையங் கானல்’, அம் சாரியை; குரிசில், ஆண்டகை; இஃது இயல்புவிளி; கொன், பெரியது; இஃதிப்பொருட்டாதல் 'கொன்னொன்று கிளக்குவல்' என்னும் மதுரைக்காஞ்சியடிக்கு (207) அதன் உரைகாரர் கூறும் உரையாற் பெறப்படும்;

'கேண்மதி' இதன்கண் மதி முன்னிலையசைச்சொல்; உறைமதி பெரும' (மதுரைக்காஞ்சி, 781) என்புழிப் போல.

(27-30) நீயே ஆர் உயிர்த் தொகுதிக்குப் பேறுதரல் வேண்டி ஐந்தொழில் இயற்றுவை -தேவரீர் அரிய உயிர்க்கூட்டங்கட்கு நுமது திருவடிப் பேற்றை அளித்தல் கருதிப் படைத்தல் முதலான ஐந்தொழில்களைச் செய்வீர், யானே ஒருநெறி இன்றிப்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/150&oldid=1586894" இலிருந்து மீள்விக்கப்பட்டது