உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் - 20

பொறிவழி ஓடி ஐம்புலன் நுகர்ந்தாங்கு அமைகுவென் - ஏழையேன் ஓர் அருள் நெறியில் நிற்றலில்லாமல் மெய்வாய் முதலான ஐந்து பொறிகளின் வழியே பாய்ந்து அவற்றின் ஊ ஊறு சுவை முதலான ஐந்து புலன்களை நுகர்ந்தபடியே அமைந்திருப்பேன்;

‘ஐந்தொழில்' என்பன, படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளலாகும்.‘படைத்தல்' என்பது, அறியாமையால் மூடுண்டு கிடந்த உயிர்களுக்கு உடம்பைக் கொடுத்து, அவ்வாற்றால் அவற்றிற்கு அறிவைத் தோற்றுவித்தல்; ‘காத்த’ லென்பது, உடம்பெடுத்து உயிர்களுக்கு வரவர அறியாமை தேய்ந்து கழிய, அவற்றின் அறிவை வளரச்செய்தல்; ‘அழித்தல்’ என்பது உயிர்கள் தம்முடைய இருவினைப் பயன்களைத் தொடர்ந்து நுகருதலால் அவற்றின் உடம்பு வலிகுறைய அவைதாமும் இளைப்புறுதலால், அவற்றின் பழவுடம்பு கழித்து, மீண்டும் அவ்வுயிர்களைப் புத்துடம்பிற் பிறப்பிக்குமுன் சில காலம் இளைப்பாறச் செய்தல். 'மறைத்தல்' என்பது ஒவ்வொரு பிறவியிலும் உயிர்கள் மேலும்மேலும் இருவினைப் பயன்களை அவாவுடன் நுகரும் பொருட்டு அவைதமக்கு முற்பிறப்புக்களில் நிகழ்ந்த இருவினை நுகர்ச்சிகளை மறைத்து மறக்கும்படி செய்தல். ‘அருளல்' என்பது இம்முறைகளால் அறியாமை முற்றுந் தேய்ந்து பேரறிவு கிளரப்பெற்ற உயிர்களுக்கு வீட்டின்பத்தை

வழங்குதலாகும். எல்லாம் வல்ல இறைவன் ஆருயிர்த்தொகுதிகள் பொருட்டுச் செய்யும் இவ்வைந்தொழி லியல்புகள்,

எனச்

“அழிப்பிளைப் பாற்ற லாக்க மவ்வவர் கன்ம மெல்லாங் கழித்திட னுகரச் செய்தல் காப்பது கன்ம வொப்பிற் றெழித்திடன் மலங்க ளெல்லா மறைப்பருள் செய்தி தானும் பழிப்பொழி பந்தம் வீடு பார்த்திடி னருளே யெல்லாம்'

சிவஞானசித்தியாரில்

கூறப்பட்டிருத்தல் காண்க.

(1: 37) விளக்கமாய்க்

'பொறிகள்' எனப் பொதுவாகக் கூறினமையால் ஐம்பொறிகளுமென உரைக்கப்பட்டது; அவையாவன, மெய் வாய் கண் மூக்குச் செவி; ஐம்புல னென்பன

அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/151&oldid=1586895" இலிருந்து மீள்விக்கப்பட்டது