உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

127

வைம்பொறிகளின் உணர்வுகள்; அவை ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை யென்பன; பொறிவழியோடி அவ்வுணர்வுகளை நுகர்த லென்க. ஆண்டவன் படைத்தல் முதலான ஐந்தொழில்களையும் என்றும் இயற்றுதல் போல், ஆசிரியர் தாமும் உறுதல் முதலான ஐந்தொழில்களையும் ஓயாது இயற்றுவதாகக் கூறி ஒப்புமை

காட்டினார்.

'ஓடி' யெனப்பட்டது, பொறிவழிச் செல்லுதலில் உள்ளத்துக்கு உள்ள விரைந்த விருப்பத்தை வெளிப்படுத்துதற்கு.

(31-34) நீயே மக்கள்மேல் கொண்ட பொச்சம் இல் அன்பில் தாயே அனைய அளியினை - தேவரீர் தம் மக்கள்பால் வைக்கும் பொய்மையில்லாத அன்பில் தாயையே ஒத்த அன்பினை யுடையீர்; யானே மனைவியும் மக்களும் பொருள் எனக்கொண்டு - ஏழையேன் மனைவியையும் மக்களையுமே உறுதிப் பொருள்களெனக் கருதி, நினைவது ஒன்று இல்லாப் பேர் அன்பினனே - ஏனையொரு பெரும்பொருளிருப்பதாகவும் நினைதல் சிறிது மில்லாத பேரன்பினை உடையேன்;

‘பொச்சம்’,பொய்; பொக்கம் என்பதன் திரிபு (பிங்கலந்தை); பொச்சமிலன்பு மன்னர்’ (திருநாட்டுப்படலம், 31) என்பது திருவிளையாடற் புராணம்.

அது;

‘தாயே' என்பதன் ஏகாரம், பிரிநிலையொடு தேற்றம்.

‘அளியினை’, குறிப்பு வினைமுற்று, 'அன்பினென்' என்பதும்

ஒன்று ஈண்டுச் சிறிதென்னும் பொருளில் வந்தது; இஃதிங்ஙனம் வருமாறு, 'மாயைக் குணர்வொன்று மில்லை யென்றே வத்திடுமதனால்' (சிவஞானசித்தியார், 1, 17) என்பதிற் காணப்படும்.

மக்களு மென்பதன் ஈற்றிலும் பிரிநிலைத் தேற்றேகாரம் விரித்துரைத்துக் கொள்க.

இதன்கண், நீ நின்மக்கள்மேல் அன்புடையையாதல்போல், யானும் என் மனைவிமக்கள்மேல் அன்புடையே னென்று ஒற்றுமை காட்டியவாறாம்; இறைவனுக்கு மக்களாவன

உயிர்களென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/152&oldid=1586896" இலிருந்து மீள்விக்கப்பட்டது