உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

  • மறைமலையம் – 20

(35-42) நீயே - தேவரீர், யானைவெண் மருப்பும் தேனின் இறாலும் மயில் தழைப்பீலியும் விரைகமழ் சாந்தமும் ஒருங்கு தலைமயங்கிய இரும்பெருங்குன்றத்து - யானையின் வெள்ளிய கொம்புகளும் தேனின் கூடுகளும் மயிலின் தழைதலையுடைய தோகைகளும் மணங்கமழுஞ் சந்தனக்கட்டைகளும் ஒருங்கு கலந்துகிடக்கும் மிகப்பெரிய மலையில், ஆனாது உறையும் இயல்பினை - விருப்பம் நீங்காது எழுந்தருளியிருக்கும் இயல் பினையுடையீர்! யானே - ஏழையேன், புலம் இல்கல்வியும் நலம் இல்புகழும் வழுவிய ஒழுக்கமும் கழுவாக்குற்றமும் ஒருவழி அமைந்து பெருகிய செருக்கு எனும் கோடுகெழுகுன்றில் பகுத்தறிவில்லாத படிப்பும் நன்மையில்லாத புகழும் தவறிய ஒழுக்கமுங் கழுவியகற்றாத குற்றமும் ஒன்றாய்ப்பொருந்திப் பெரிதான ஆணவம் என்னும் உச்சிகெழுமிய மலைமேல், பீடு உறுகுவென் - அமர்ந்து பெருமை பெறுவேன்;

இறால், 'தேன்கூடு;' 'இறாறேன் கூடே' என்பது திவாகரம் (விலங்கின் பெயர்த்தொகுதி). 'தழைப்பீலி', இரண்டாம்

-

வேற்றுமைத்தொகை; 'தழை' முதனிலைத்தொழிற்பெயர். 'தலைமயங்குதல்' ஒன்றோடொன்று கலந்துகிடத்தல்; ‘வகை தெரிவறியாவளந்தலை மயங்கிய' (சிலப்பதிகாரம், 14, 178) வென்புழிப்போல.

‘ஆனாது’, ஈண்டு நீங்காது என்னும் பொருட்டு; 'கொள்ளை மாந்தரினானாது' என்னும் அகநானூற்றின் கண்ணும் (3) இச்சொல் இப்பொருட்டாதல் காண்க. ‘புலம்', அறிவு; இங்குப்பகுத்தறிவினை யுணர்த்தும்.

'பெருகியகுன்று'

எனத்தொடுத்துக்கொள்க.

தீய

இயல்புகளெல்லாம் ஈண்டு மலையாக உருவகப்படுத்தப்பட்டன; திருக்குறளில் (3:9) நல்லியல்புகளெல்லாங் 'குணமென்னுங் குன்று' என உருவகப்படுத்தப்பட்டாற்போல வென்பது.

இதன்கண்,

முருகப்பெருமான் குன்றுகண்மேல் எழுந்தருளி யிருத்தல்போல, ஆக்கியோர்தாமுந் தீமையென்னுங் குன்றுகண் மேல் ஏறியுறைவதாக ஒற்றுமை தேற்றியவாறு காண்க; முருகப் பெருமான் குன்றுகண்மேல் அமர்ந்தருளும் உண்மை, அவனெழுந் தருளுதற்குரிய ஆறுபடை வீடுகளுட் ‘குன்றுதொறாடல்' என்பதும் ஒன்றாதல் கொண்டும், 'குன்றுதொ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/153&oldid=1586897" இலிருந்து மீள்விக்கப்பட்டது