உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

129

றாடலு நின்றதன் பண்பே' என்னுந் திருமுருகாற்றுப் படையின் (217) றிருமொழி கொண்டும் நன்கு துணியப்படும். பீடு, பெருமை.

-

-

-

(43-58) நீயே - தேவரீர், அறல் நெறித்தன்ன - செறிகுழல் கற்றையும்- கருமணல் முடங்கினாற்போல் நெளிதல் உள்ள மயிர்த்தொகுதியும், பிறை செறித்தன்ன நறைகமழ் நுதலும் எட்டாம் பிறைத் திங்களைப் பொருத்தினாற் போன்ற மணம்வீசும் நெற்றியும், கயல் இணைத்தன்ன அகல் இருவிழியும் - இரண்டு கெண்டை மீன்களை முகஞ்சேர்த்து வைத்தாற்போல் அகன்ற இரண்டு கண்களும், குமிகை முகிழ்த்தன்ன அமைவரு நாசியும் இளைய எள்ளின் மொட்டு அரும்பினாற்போல் அமைந்த மூக்கும், பளிங்கின் அன்ன துளங்கு ஒளிக்கதுப்பும் - பளிங்கிற்போல அசைந்து நிழலாடும் விளக்கத்தினையுடைய கன்னங்களும், வள்ளை அன்ன தெள் ஒளிச் செவியும் வள்ளைத்தண்டை ஒத்த தெளிந்த ஒளியையுடைய செவிகளும், குலிகம் தோய்த்த இலவு உறழ் இதழும் இங்கு லிகத்திற் றோய்த்தெடுத்த இலவம் பூவை ஒக்கும சிவந்த வாயிதழும், முறுவல் பூப்ப மின் என் மிளிரும் குறுமுத்து அன்னசிறுமுள் எயிறும் - புன்னகை மலருங்கால் மின்போல் ஒளிவிடுகின்ற குறிய முத்துப்போன்ற சிறிய முள் ஒக்கும் பற்களும், கொழுநீர்ப் பணிலத்து விழுமிய கழுத்தும் - செழுமையான நீர்வாழ் சங்கை ஒக்குஞ் சிறந்த கழுத்தும், எமக்கு அருள் மரபின் தமக்கு அமை கயும் ஏழையேங்கட்கு அருள் செய்யும் இயல்பினால் தமதருட்டன்மைக்கு இசைந்த அருட்கையும், சிவிறி விரித்து அன்ன சிறு திருவடியும் - சிவிறியை விரித்து வைத்தாற் போன்ற சிறிய திருவடிகளும், எம் உளம் நீங்காச் செம்மையின் தோன்ற வீறு கழு பகுதியின் வேறு இருமடவர் கூறுகொண்டு ருபுடை விளங்க - எளியேங்கள் உள்ளத்தினின்றும் நீங்காத செவ்வியில் இடையறாது தோன்றுமாறு மேன்மை கெழுமிய வலப் பக்கங்களில் வேறுவேறாக மங்கையர் இருவர் பங்குகொண்டு இருபக்கங்களிலும் விளங்க, சீறிய மயில்மிசை வருகுவை - சீற்றங் கொண்டுவந்த மயிலின் மேல் எழுந்தருளி வருவீர்!

நெறித்தல், முடங்குதல், நெளிதல், 'நெறிகொள் வரிக்குடர்' (புறம், 160) என்பதன் உரையைக் காண்க. மக்கள் உடம்புபோல் வாலாமையும் அதனால் தீய முடைநாற்றமும் இல்லாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/154&oldid=1586898" இலிருந்து மீள்விக்கப்பட்டது