உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் - 20

எல்லாம் வல்ல இறைவியின் அருளுடம்பு நறுமணங் கமழ்தலே உடைமையின் நுதல், ‘நறைகமழ் நுதல்' எனப்பட்டது; சாந்தும் அணிதலுடைமையின் அங்ஙனங் கூறப்பட்ட

நீறும்

தென்றலுமொன்று.

மகளிர் நெற்றிக்குப் பிறை உவமையாதலின் வகை முன்னரே விளக்கப்பட்டது.

குமிகை - இளையென், (பிங்கலந்தை)

கன்னங்களின் துளங்கொளி அவற்றின் பக்கத்தே யமைந்த செவியின் மேலும்பட்டு ஒளிசெய்தலின், அச்செவியுந் தெள்ளொளியுடைய என்றார். மற்று விளக்கம் மிக்க மணிகளால் இழைக்கப்பட்டதோடு அணிந்த செவிகளாகலின், அங்ஙனந் தெள்ளொளியுடைய வாயின வென்றலும் ஒன்று, அன்றி; இவ்விருவகை யொளிகளாலும் அவை விளங்கின வெனலுமாம்.

இயற்கையே செந்நிற முடையதாகிய இலவமலர் இங்குலிகத்திற் றோய்த்தெடுத்தவழி மேலுஞ் சிவந்த நிறத்தின தாய் விளங்கலின் அஃது அம்மையரின் வாய் இதழுக்கு மையாயிற்று.

அத்துணைச் சிவந்த இதழ்கள் திறந்தவழித் தோன்றும் பற்கள் முத்துபோல் வெண்ணிறத்தின வாயினும், அச்சிவந்த இதழ் ஒளியுடனும் விரவுதலின், அவை மின்னொளியொடு மிளிரும் என்றார், முத்து வெண்மைக்கும் ஒளிக்கும்

வன்மைக்கும் உவமை.

பணிலம், மழமழப்புக்கு உவமை; நீரின்கண் இருந்து உண்டாதலின், 'நீர்ப்பணிலம்' எனப்பட்டது; ‘நல்ல நீர்மையுள்ள பணில' மெனலுமாம்.

'சிவிறி விரித்தன்ன' வென்னுங் குறிப்புத் திருவடி விரல்கள் தனித்தனி நெருங்கி நிற்றலைக் குறித்தவாறாம்.

வீறு

'வேறொன்றற் கில்லா ா அழகு' என்பர்

நச்சினார்க்கினியர் (சீவக சிந்தாமணி, 489)

மடவார், இங்கு வள்ளி தெய்வயானையம்மையார்.

சீறியமயில்

-

சீற்றத்துடன் வந்த சூரனாகிய மயில்;

கடைப்படியாக முருகப்பிரானது வேலால் இருகூறாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/155&oldid=1586899" இலிருந்து மீள்விக்கப்பட்டது