உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

131

போழப்பட்ட சூரனது உடல் சேவலும் மயிலுமாகிப் பிரானொடு பொருதற்குப் பெருஞ்சீற்றத்துடன்வர, இறைவன் சேவலைக் கொடியாக நிறுத்தி, மயிலை ஊர்தியாகக் கொண்டனெனக் கந்தபுராணங் கூறும். அது,

"தாவடி நெடுவேன்மீளத் தற்பரன் வரத்தால் வீடா மேவலன் எழுந்து மீட்டு மெய்பகிரிரண்டு கூறுஞ் சேவலுமயிலுமாகிச் சினங்கொடு தேவர் சேனை காவலன் றன்னைநாடி யமர்த்தொழில் கருதி வந்தான்.”

என்னுஞ் சூரபன்மன் வதைப்படலச் செய்யுளால் (492) அறியப்படும். மன், ஓ அசைநிலை.

(59-77) யானே - ஏழையேன், கருநெறி மறமும் - கருதிய நெறியினையுடைய பாவமும், அருகிய அறிவும் அறிவும், விரிவுறு மயக்கமும்

-

-

குறுகிய

-

-

-

விரிந்த மயக்கமும், திருகிய சினமும் - முறுகிய சினமும், தொண்டர்ப்பணியா நாணமும் - அடியார்களை வணங்காத நாணமும், எண்தோள் முக்கண் பெருமான் பெரும்புகழ் நக்குச் சமயக் கணக்கர் அமைவு இலகூறும் புல் உரை கொள்ளும் பொல்லாக் கிழமையும் எட்டுத் தோள்களும் மூன்று கண்களும் உடைய சிவபெருமானது பெரும்புகழை ஏளனஞ் செய்து அயல்மதத்தார்கள் ஆராய்ந்து அமைதல் இலவாகக் கூறுஞ் சிறிய கூற்றுகளை மேற்கொள்ளுந் தீய இயல்பும், வெகுளியொடு படூஉம் தகை இல் மாற்றமும் சினத்தொடு கூடிய தகுதி யில்லாத பேச்சும், அறிவோர் நகைப்ப மடவோர் திகைப்பப் பொருளொடு பொருந்தாப் புகுந்துசொன் மொழியும் - அறிஞர் நகைப்பவும் அறிவிலார் திகைப்பவும் மெய்ம்மையோடு சையாத முன்விரைந்து மொழியுஞ் சொல்லும், உறுவரைப் பேணாது எழும் இறுமாப்பும் பெரியாரைப் போற்றாது எழுகின்ற செருக்கும், எளிவந்தோரும் இரவன் மாக்களும் அழுவிளிக் கம்பலை கொள்ளக்குழைவின்றிப் பழுதுறச் சென்றாங்கு எறிந்து நகும் முருடும் வறியவரும் இரத்தற்றொழிலைச் செய்வாரும் அழுது பிறரை அழைக்கும் ஓலம் இட நெஞ்சிளக்கமில்லாமற் பொல்லாங் குண்டாகச் சென்று அங்கே அவர்களை அடித்து அவ்வாற்றால் உவக்கும் முருட்டுத் தன்மையும், அறிவொடு படாஅச் சிறுதொழில்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/156&oldid=1586900" இலிருந்து மீள்விக்கப்பட்டது