உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

முறைமையும்

-

  • மறைமலையம் - 20

அறிவொடு கூடாத புல்லிய செயல்வகையும், நீங்காமரபின் ஓங்கிப்பொலிய- பிரியாத வியல்பினால் மிக்கு பொலிய-பிரியாத விளங்க, யான் எனது என்னும் கூனல் கிழத்தியர் பெரும்புறம் கவவி வயின் வயின் அமைத்து யான் எனது என்னுங் கூன்கெழுமிய மனையாட்டிமாரின் பருத்த முதுகைத் தழுவி இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் அமைத்துக் கொண்டு, மறம் தேர் வாழ்க்கை மயில்மிசைக் கொண்டு - தீவினையே தேடும் வாழ்க்கை யென்னும் மயிலின்மேல் அமர்ந்து, சிறந்ததோர் திறத்தில் சிவணுவென் அன்றே - இவ்வகைப்பட்ட பெருமை யான தொரு வகையில் நினக்கு நிகராகுவே னல்லனோ!;

கருநெறி, கருகிய நெறி; ஆவது பொருண்மறைந்த நெறி. கருகல், பொருண்மறைதல்; எனவே இங்குப் இங்குப் புண்ணியப்

பொருண்மறைந்த நெறியென்க.

'திருகிய சினம்' முறுகிய சினம்; ஆவது மிகுந்த சினமென்க; “உரவுச் சினந்திருகிய” என்றார் புறநானூற்றிலும் (25).

தொண்டர்ப் பணியா நாணம், திருத்தொண்டரைப் பணிய வொட்டாதபடி தடைசெய்யும் நாணமென்பது.

சிவபெருமான்

உலகமெங்கணும்

நிறைந்த

முழுமுதலாகலின் உலகத்தின் எட்டுத் திசைகளையும் அவனுக்கு ‘எண்டோள்க’ ளெனவும், ஞாயிறுந் திங்களுந் தீயும் அவனுக்கு 'முக்கண்க’ ளெனவும் அறிந்தோர் உரைப்ப.

6

‘சமயக் கணக்கர், சமயநூல் வல்லுநர்; “சமயக் கணக்கர்தம் மதிவழி கூறாது” (கல்லாடம், 15) என்பது காண்க. அமைவில, குறிப்பு முற்றெச்சம்.

'கிழமை,'இங்கு இயல்பு, இஃது இப்பொருட்டாதல் குணமுங் காணியுங் கிழமை” யென்னும் பிங்கலந்தையால் (3370) அறியப்படும்.

“வாரமுங்

பிறர் விரும்பாத நிலையில் தானே முன்விரைந்து பதறிமொழியுஞ் சொல் 'புகுந்து சொன் மொழி' யெனப்பட்டது. ‘பொருளொடு பொருந்தா” என்பதிற் பொருள் மெய்ம்மையினை யுணர்த்திற்று; "பொய்யுரையே யன்று பொருளுரையே” என்பதிற் போல (சிலப்பதிகார,ை9,18)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/157&oldid=1586901" இலிருந்து மீள்விக்கப்பட்டது