உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

133

உறுவர், மேலோர்; “உறுவர்ப் பேணல்" என்னுஞ் சீவக சிந்தாமணித் தொடர்க்கு (2816) ‘மிக்கோரை விரும்புதல்' என்று உரைகாரர் நச்சினார்க்கினியர் கூறுதல் ங்கு உற்று

நோக்கற்பாலது.

கருதி,

இரப்போர்' மாக்கள் எனப்பட்டார், இரத்தலின் இழிவு

‘அழுவிளிக் கம்பலை' அழுது எதிர்ப்பட்டாரை விளித்து இடும் ஓலஒலி; ‘கம்பலை' யென்பது ஒலி; இது.

66

'கம்பலை சும்மை கலியே யழுங்க

லென்றிவை நான்கு மரவப் பொருள"

என்னுந் தொல்காப்பிய உரியியல்

(53) நூற்பாவால்

உணரப்படும். அழு என்னும் முதனிலை வினையெச்சப் பொருளில் வந்தது; "வரிப் புனை பந்து" என்பதிற்போல வரிப்புனை (திருமுருகாற்றுப்படை,68).

‘எறிதல்’ ஆவது ‘அடித்து வருத்துதல்' முதலியன வென்க.

‘முருடு’ விறகு (திவாகரம்); விறகையொப்ப ஈரமில்லாக் கொடுநெஞ்சப் பான்மையினை யுணர்த்திற்று; "வன்பராய் முருடொக்கு மென் சிந்தை” என்றார் திருவாத வூரடிகளும் (திருவாசகம், செத்திலாப் பத்து, 4).

கூனற்கிழத்தியரின் முதுகு குவிந்து தோன்றுமாகலிற் 'பெரும்புறம்' என்றார்.

66

‘கவவல்' அகத்தே அடங்கும்படி தழுவல், “கவவுக்கை ஞெகிழாமல்" என்பதன் உரையை உற்றுநோக்குக (சிலப்பதிகாரம், 1, 61).

(78-85) நீயே -தேவரீர், காந்தள் அம்கண்ணி ஏந்திய மார்பத்து - காந்தட் பூக்களாற் றொடுக்கப்ட்ட மாலையைத் தாங்கிய மார்பில், செம்சாந்து நீவிய சிறந்த கோலமொடு-சிவந்த சந்தனக் குழம்பைத் தடவிய சிறந்த திருக்கோலத்துடன், குறவர் மகளிர் விழவொடு குழீஇ குறவர் பெண்கள் எடுக்கும் விழாவொடு கலந்து, வெறி அயர் களத்தில் விளங்குவை வெறியாடு மிடத்தில் முனைந்து தோன்றுவீர்! யானே - அடியேன், முல்லை அம் தொடலை முருகு எழ அணிந்து - முல்லை

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/158&oldid=1586902" இலிருந்து மீள்விக்கப்பட்டது