உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் - 20

யரும்புகளாற் பிணைக்கப்பட்ட மாலையை மணங்கமழும்படி அணிந்து, வெண்சாந்து பூசிய கேழ்கிளர் மார்பமொடு வெண்சந்தனம் பூசிய விளக்கம் மிக்க மார்புடன், இழிசின மகளிர் இயைந்த இன்ப வெறியாடு களத்து வெளிப்படுகுவென் இழிந்த மகளிரொடு பொருந்திய சிற்றின்ப மென்னும் வெறியாடு களத்தில் வெளிப்பட்டுத் தோன்றுவேன். ஏ: அசைநிலை.

'காந்தளங் கண்ணி' ‘முல்லையந் தொடலை' என்பவற்றில் அம், சாரியை. 'கண்ணி'யுந் ‘தொடலை'யும் இங்குப் பொதுப் பெயராய்நின்று மாலையை யுணர்த்தின.

செஞ்சாந் தென்பது குங்குமப் பூ முதலான சிவந்த மணப்பண்டங்களாற் கூட்டப்படுங் கூட்டு; நீவிய - தடவிய; ப்பொருட்டாதல் ‘திவாகர’த்திற் காண்க.

'வெண்சாந்து' பச்சைக் கருப்பூரமும் பனிநீரும் முதலான நறுமணப் பொருள்களாலான கலவை. வெண்சாந்து பூசிய மார்பின்கண் செஞ்சாந்து பூசிய மார்பைவிட நிறம் விளங்குதல் இல்லாமையின், 'கேழ்' என்பதற்கு ‘விளக்க’மென உரைத்தலே வாய்வதாம்; 'கேழ்' -ஒளி, (பிங்கலந்தை).

குறவர்கள் தாம்வழிபடும் முருகக் கடவுட்கு விழாவெடுக்குங்காற் பெரும்பான்மையும் அவர் மகளிரே ஆங்குக் குழுமி ஆடுதலும் பாடுதலுஞ்செய்து வெறி அயர்வர். என்னை? மகளிர்க்கே அவ வாடுதலும் பாடுதலுஞ் சிறத்தலின் என்பது. குறவருந் தங்குறத்தியரொடு கூடிக் குரவை அயர்வரென அகநானூற்றிற் (232) பெறப்படு மாயினும், ஆண்டு அஃது அக்குரவை யயர்வைக் குறத்தியர்க்கே பெரும்பான்மையும் எடுத்தோதுதலாலும், அஃதொப்பவே சிலப்பதிகாரத்தில் வரும் ‘குன்றக்குரவை' யென்னுங் காதையும் மகளிர் கூற்றாகவே பெரிதுங் கூறப்பட்டிருத்தலாலும், மேலும் வள்ளியின் கோலம் பூண்டு குறவர்மகளிர் 'வள்ளிக்கூத்து’ என ஒன்று ஆடுதலுடையராய் முருகனுக்கு விழவயர்வரென்னுங் குறிப்புத் தொல்காப்பியம் (புறத்தினையியல், 5), பெரும்பாணாற்றுப் படை (370) முதலான பண்டைத் தண்டமிழ் நூல்களிற் கூறப்படுதலாலும், பண்டைச் செந்தமிழிலக்கண இலக்கியங்கள் பெரும்பாலனவற்றிற்கு உரைகண்ட ஆசிரியர் நச்சினார்க்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/159&oldid=1586903" இலிருந்து மீள்விக்கப்பட்டது