உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

கினியரும் இக்கூத்து

135

மகளிர்க்கே உரித்தெனத் துணி புரைத்தலாலும், இற்றை ஞான்றும் 'வேடர்பலி' முதலாக விழவெடுக்கு மிடங்களில் மகளிரே வள்ளிக் கோலம் பூண்டு முருகனொடு விழவயர்தல் உலகவழக்கினுள்ளும் எங்குங் காணப்படுதலாலும், குறவர் தம்மிலும் அவர் மகளிர் மாட்டே முருகக்கடவுள் முனைத்து விளங்குவானென்பது சிறிதும் ஐயுறவின்றி நன்கு தெளியப்படும. அதுபற்றியே ஈண்டுக் குறவர்மகளிர் விழவொடு, குழீஇ வெறியயர்களத்தில் விளங்குவை யெனப்பட்டதென்க. வெறி தெய்வமயக்கம்; அயர்தல். ஆடல்; களம், இடம்; எனவே 'வெறியயர் களம்’ என்பது 'தெய்வ மேறியாடுமிட' மெனக் கொள்ளப்படும்.

'இழிசினமகளிர்,’ இழிந்தமகளிர்; இழிசின இப்பொருட் டாதல் “இழிசினர்க்கே யானும் பசித்தார்கணீதல்” என்னுஞ் 'சிறுபஞ்ச மூலத்திற் (77) காண்க.

சான்றோர்கள் நூல்செய்யப் புகும்வழி உலகவர்பாற் காணப்படுங் குற்றங்களையெல்லாந் தம்மேலேற்றி அவர் திருந்தும் பொருடடுத் தந்நூற்கண் உரையாநிற்பர். இது, தேவார திருவாசக முதலான திருமறைத் தமிழ்நூல்களால் நன்கு பெறப்படும்; இங்கு அடிகளும் அம்மரபேபற்றி இப்பாட்டின்கண் மிகப்பல குற்றங்களை யெல்லாந் தம்மேலனவாக ஏற்றிக் கூறியருளுவாராயினரென்பது.பிறாண்டு வருமிடங்களிலும் இக்கருத்தேகொள்க.

மகளிரை யடுத்து 'ஒடுவுருபு' விரித்துக்கொள்க.

'இன்பவெறி', சிற்றின்ப மயக்கம்; இம்மயக்கத்திற் றிளைத்தாடு மிடம் ‘பரத்தையர் சேரி' யென்க.

(85-87)எனவாங் கு என்றங்ஙனமாக, நின்னொடும் என்னிடைப்பட்ட ப்பட்ட இவ் இயைபால் நினக்கும் எனக்கும்

-

இடையே உண்டான இத்தொடர்பினால், எனக்கு அருள்தரல் இயையும் - எளியேற்குத் தேவரீர் தமது அருளை வழங்குதல் பொருந்தும்;

நின்னொடு மென்பது நினக்கும் என உருபுமயக்கமாயிற்று.

(87-91) தனக்கு நிகராகுநரொடு நகைதருகேண்மை செயலாகுவதென மொழிகுவர் அதனால் தனக்கு ஒப்பவாரோடு

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/160&oldid=1586904" இலிருந்து மீள்விக்கப்பட்டது