உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

❖ 20* மறைமலையம் – 20

ஒருவன் மகிழ்ச்சிதரும் நட்புச்செய்தலே ஆக்கந்தருவது எனச்சான்றோர் ஆணை தருவாராகலின், நுந்தையும் முனிகுவன் அல்லன் - நும் தந்தையாகிய சிவபெருமானும் நும்மை அதற்காக வறுப்பான் அல்லன்; அன்னையும் நுந்தை வழிப்படூஉம் தகையள் நும் தாயாகிய உமையம்மையும் நும் தந்தையின்

-

வழிநிற்குங் கற்புடையள்;

66

நட்பு ஒத்தார்கண்ணதென்பது ணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்” என்னும் அருமைத் திருமொழியால் (திருக்குறள்,785) இனிதுபெறப்படும்.

‘நுந்தை’ முன்னிலை முறைப்பெயர், தை முறைப்பெயர் ஈறு; 'நும் தந்தை' என்பது திரிந்ததன்று; "குற்றியலுகர முறைப்பெயர் மருங்கின்” என்னுஞ் சூத்திரத்தை நோக்குக (தொல்காப்பியம், எழுத்து, 34.)

'நுந்தையு முனிகுவ னல்லன், அன்னையும் நுந்தை வழிப்படுந் தகைய’ ளாதலால், எனக்கு நீ அருடரற்கு ஏதும் இடுக்கில்லையெனக் கூறியவாறாம்; இஃது அவாய் நிலையாற் கொள்ளப்படும்.

(91-99) மைந்து கெழு பொருப்பைப்போழ்ந்து - வலிமை பொருந்தி ‘கிரவுஞ்ச' மலையைப்பிளந்து, விருப்பொடும் எதிர்ந்த அரிமா முகத்தனைப் பொரிபடநூறி - போர்விருப்பத்தோடும் எதிர்ந்துவந்த 'சிங்கமுகாசுரன்' என்பவனைப் பொரிந்துபோகப் பொடிபடுத்தி, காழ் உறும் அரக்கரை நூழில் ஆட்டி மனவைரங்கொண்ட அரக்கர்களைக் கொன்றுகுவித்து, பொரியரை மாவாய் விரிகடல் மூடிய சூர்முதல் முதலற முருக்கி பொரிந்த அடியினையுடைய மாமரமாகி அகன்ற கடலினை மூடிய சூரர்தலைவனை முதலறும்படி முறித்துவீழ்த்தி, பேர் அருள் அழிவுபடும் உள்ளத்துப் பழியொடு பிறங்கும் உலையா வாழ்க்கைத் தேவர்க்கு - தேவரீரது பேரருளை அழிவுபட்ட உள்ளத்தோடும் ‘சூரர்க்கு ஆற்றாதார்' என்னும் பழியினால் மிகுந்தும் கெடாத உயிர்வாழ்க்கையினையுடைய தேவர்களுக்கு, தலைமையொடு நல்கும்

-

அரசுசெலுத்துந்தலைமையுடன் கொடுத்தருளுகின்ற, தமிழ்கிழவோயே - தமிழ்மொழிக்கு உரியையான முருகக்கடவுளே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/161&oldid=1586905" இலிருந்து மீள்விக்கப்பட்டது