உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

137

பொரிபடநூறி’,பொரிந்துபோகப் பொடிபடுத்தி; ‘நூறு' பொடி, (திவாகரம்). 'நூழிலாட்' டென்பது, கொன்றுகுவித்தல் (தொல்காப்பியம், புறத்திணையியல்,17).

பொரியரை, மரங்களின் நால்வகையரைகளுள் ஒன்று; அது பொரிந்த அடிமரம்.

முதலற, அடியோடு;

முருக்கி, முறித்து; இதற்கு இப்பொருள் பாருள் உண்மை “காப்புடைய வெழு முருக்கி" (14) என்னும் புறாநானூற்று ரையிற்காண்க; ஆவது இங்குக் கான்றென்னும் பொருட்டு. பிறங்கு தல் - மிகுதல் (புறம், 49).

'உலையா வாழ்க்கை'யைத் தேவர்களுக்கு ஆளுகை செய்யும் உரிமையுடன் ன் வழங்கினான் என்றற்குத் 'தலைமையொடு நல்கும்' எனப் பட்டது; உலையா கெடாத (புறப்பொருள் வெண்பாமாலை, 10, 10). மானம் அழிந்தும் உயிர் நீக்கமாட்டாச் சாவா வாழ்க்கையுடைய தேவர்க்கு மீண்டும் அரசுரிமை நல்கி அவரது L மானத்தை

நிலைநிறுத்தினமை கூறியபடி.

இன்னோசை நலங்கருதித் தமிழ் கிழவோயே எனமிகாது இயல்பாய் வந்தது. “பழமுதிர்சோலை மலைகிழவோனே' (திருமுருகாற்றுப்படை, 317) என்புழிப் போல.

'தமிழ்க்கிழவோயே, தனக்கு நிகராகுநரொடு கேண்மை செயலாகுவதென மொழிகுவரதனால் நுந்தையு முனிகுவனல்லன் அன்னையும் நுந்தைவழிப்படூஉந் தகையள், நின்னொடும் என்னிடைப் பட்ட இவ்வியைபால் எனக்கு நீ யருடரலியையும் என வினைமுடித்துக் கொள்க. (10)

11. பிரிவாற்றாத தலைவி மதியொடு வருந்தல்

கிழமை நினையாத கேழ்மதியே யொற்றிக்

குழகன் பிரிந்த குறிப்பாற் – பொழுதறிந்து

செல்லுமுயிர்ப் பேதைக்குத் தீங்கிழைப்பாய் நின்னையடும் வல்லரவைக் கொல்லா மயில்.

ஆகவே

(இ-ள்). கிழமை நினையாத கேழ்மதியே - உரிமை கருதாத நிறங்கிளர்ந்து விளங்கும் நிலவே, ஒற்றிக்குழகன் பிரிந்த குறிப்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/162&oldid=1586906" இலிருந்து மீள்விக்கப்பட்டது