உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் 20

- திருவொற்றிமுருகன் என்னைப்பிரிந்த குறிப்பினால், பொழுது அறிந்து - நேரந்தெரிந்து, செல்லும் உயிர்ப்பேதைக்குத் தீங்கு இழைப்பாய் - பிரிவாற்றாமையால் உடம்பினின்றும் பிரிந்து செல்லுகின்ற உயிரையுடைய பேதையாகிய எனக்குத் தீமை புரிகின்றனை; நின்னை அடும்வல் அரவை மயில் கொல்லா இவ்வாறே நீ செய்வையாயின் நின்னை விழுங்கும் வல்லமை வாய்ந்த ‘இராகு' என்னும் பாம்பை என் தலைவன் ஊர்ந்துவரும் மயில் கொல்லாது என்க.

திங்களும் ஞாயிற்றுக்கு மனைவியாயமைந்த பெண் பாலாகலான் தன்னோடொத்த பெண்பால் இவளன்றே என்னும் உரிமை கருதாமல் அது வருத்துதலிற் ‘கிழமை நினையாத’ என்றும், அங்ஙனங் கிழமை நினையாது வருத்துகின்றுழி ஒளிகிளர்ந்து நிற்றல் பெண்மைக்கு இழுக்காமாகலிற் 'கேழ்மதியே' என்றுங்கூறினாள்.

‘குழகன்’, இங்குக் கட்டிளமையுடையவன்; அவன் முருகன்; ‘முருகன்' என்னுஞ்சொற்கும் அதுவே பொருளாகலான், ‘குழகன்’ என்பதற்கு முருகன் எனவே உரைகூறப்பட்டது. 'குழவு' இளமைப் பொருட்டாதல், "மழவுங் குழவு மிளமைப்பொருள' (தொல்காப்பியம், சொல் 312) வென்பதனா லறியப்படும்.

66

'குறிப்பாற் பொழுதறிந்து' எனப்பட்டது, பிரிந்த குறிப்பினால் வருத்தும் நேரமறிந்து என்றற்கு.

‘தலைவன் பிரிவைப் பொறுக்கலாற்றாமையால் வருந்தி உயிர் நீங்கிக்கொண்டிருக்குந் தறுவாயில், அவ்வுயிர் பின்னும் விரைந்து நீங்கிச்செல்லுமாறு மதியே, நீ தீங்கிழைக்கின்றனை,' யென்றமையால், வருந்துவாரைப் பின்னும் வருத்துங் கன்னெஞ்சமும், எளியாரை வருத்தும் பேடித்தன்மையும் ஆகாஎனக் கூறினாளாயிற்று.

தலைவன் பிரிவைப் பொறுமையுடன் ஆற்றிக் கொண்டிருக்கும் அறிவாற்றல் இல்லாமையின் இங்குத் தலைவி ‘பேதை’ யெனக் குறிக்கப்பட்டமை அறிந்து மகிழற்பாலதாகும்.

திங்கள் இழைக்குந் தீங்காவது காமநோய்மலரும் மாலை நேரத்தில் தம் தலைவரைப்பிரிந்து பிரிவாற்றாமையால் வருந்தும் மகளிர்மேல் தன் தண்கதிர்களைச்சொரிந்து அவ்வாற்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/163&oldid=1586907" இலிருந்து மீள்விக்கப்பட்டது