உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

139

அவர்க்கு அவர்தங் கேள்வரின் இனிய காதல்நினைவை மேலும் மேலு எழுப்பி வருத்துதலாகும். அந்நேரத்தில் அம்மகளிர் நிலவினொளியால் வருத்தம் எய்துதலின், அந்நிலவு தமக்குத் தீங்கிழைப்பதாய் அவர் கருதுவாராயினரென்க. இது கருதியே நந்தமிழிலக்கியங்கள் அத்தண்ணென்கதிரை வெய்தென

அனலாக உருவகப்படுத்துரைப்பதும் மரபாயிற்று.

“செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்

கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுது மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ தேன்பொதிந்த வாயால் தெரிந்து.”

என்னும் நளவெண்பாப்பாட்டு (சுயம்வரகாண்டம்,104) இங்கு

நினைவுகூரற்பாலது.

கொல்லாது' என்பது ஈறுகெட்டுக் 'கொல்லா’ என

நின்றது.

நீ எனக்குத் தீங்குசெய்தாய் என்பதை என் தலைவனது ஊர்தி அறியுமாயின், அது நின்மேற் பகைகொண்டு நின்னை விழுங்கும் வல்லரவைக் கொல்லாமல் விட்டு அவ்வரவு நின்னை விழுங்குதலையும் அதனால் அப்போது நீ வருந்துதலையுங் கண்குளிரப் பார்த்துக் கொண்டிருக்கும் எனத் தலைவி கருதிக்கூறினாளென்பது ஈற்றடியின் கருத்து. (11)

12. தோழி பருவங்காட்டி வற்புறுத்தல் “மயின்மீ திவர்ந்து திருவொற்றி யூர்ச்சென்ற மன்னவர்தா மயின்மே லமர்த்தகண் ணாய்பிரிந் தாரல்ல ரன்பு மிக்குப் பயினோடு சேர்த்திய கற்போற் றுணையைப் பயிர்ந்தகுரற் குயின்மா வொடுங்கும் பொழுதும்வந் தன்றினிக் கூடுவரே"

(இ-ள்) மயில்மீது இவர்ந்து திருவொற்றியூர் சென்ற மன்னவர்தாம் - மயில்மேல் எழுந்தருளித் திருவொற்றியூருக்குச் சென்ற நின்தலைவர், அயில்மேல் அமர்த்த கண்ணாய் வேலொடு மாறுபட்ட கண்களையுடையாய், பிரிந்தார் அல்லர் உண்மையில் நின்னைப்பிரிந்து சென்றனர் அல்லர்; அன்புமிக்கு அன்புமிகுந்து, பயினோடு சேர்த்திய கல்போல் துணையை -

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/164&oldid=1586908" இலிருந்து மீள்விக்கப்பட்டது