உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் 20

அரக்கொடு சேர்க்கப்பட்ட கல்லை ஒக்கும் உள்ளம் பிரியாப் பெடைப்பறவையை, பயிர்ந்தகுரல் குயில் மா ஒடுங்கும் பொழுதும் வந்தன்று - அழைத்த குரலையுடைய குயிற்சேவல் மாமரத்திற் சென்றொடுங்குதற்கு ஏதுவாகிய கார்காலத்து மாலைப் பொழுதும் வந்தது; இனிக்கூடுவர் - ஆதலால் நின் தலைவரும் இனி வந்து நின்னைச்சேர்வர் என்பது.

அழகியவாய்க் காண்பார்க்கு மகிழ்ச்சிமிகப் பிறழும் மாதர்கண்களின் இயற்கை, புரளுந்தோறுங் காண்பார்க்கு அச்சத்தினை விளைக்கும் வேற்படைக்கு இன்மையின் வேலொடு மாறுபட்ட என்றார்; வடிவத்தால் வேலோடு ஒப்பினுஞ் செயலில் அதனோடொவ்வா கண்கள் என்றவாறு; அமர்த்தல் - மாறுபடல், “பெண்டகைப் பேதைக் கமர்த்தனகண்” என்னுந் திருக்குறளிற்போல (1084).

பயினொடு சேர்த்திய கல் பிரிவறியாத் துணைக்கு உவமையாதல், "சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கற்போல்” என அஃது அக நானூற்றில்1,356 ஆஞ் செய்யுட்களில் இருகாற்போந்தமையாற் கண்டுகொள்க.

66

‘மிக்கு' என்னும் வினையெச்சம் 'பயிர்ந்த' வென்னும் பெயரெச்ச வினைகொண்டு முடிந்தது. பயிர்தல் - அழைத்தல்; 'துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்" என்னும் புறநானூற்றின் (158) உரையைக் காண்க. வந்தன்று, வந்தது; அன்சாரியை,

'ஒடுங்கும்பொழுது' என்றது கார்காலத்து மாலையை; குயில்கள் வேனிற்காலத்தில் மகிழ்ந்து கூவுதலும் மாரிகாலத்தில் வருந்தி வாயவிதலும் இயல்பு; இவை மாமரத்திலேயே விரும்பியுறையும். வினைமேற் சென்ற தலைவன் வினைமுடித்து மீண்டு தன் தலைவியைச் சேருநேரம் இதுவே யென்பது "பெரும்பெயல் பொழிந்த சிறு புன்மாலை (6) என முல்லைப்பாட்டிற் குறிக்கப்படுதல் இங்கு நினைவுகூரற் பாலது. எனவே, தலைவன் வருங்கார் காலத்து மாலைப் பொழுது வந்ததென்று தோழி தலைவிக்குப் பருவங்காட்டி அவளை ஆற்றாமை தணியுமாறு வற்புறுத்தினாளாயிற்றென்க. (12)

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/165&oldid=1586909" இலிருந்து மீள்விக்கப்பட்டது