உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

13. அருணிலை வியத்தல்

141

எல்லாம் வல்ல இறைவன் தமக்குப் பிறவிகடோறுஞ் சிறிதுசிறிதாக மெய்யறிவு தோற்றுவித்துப், பின்னர்த் தன்

ன்னருளை வழங்கியருளிய அருணிலையை வியந்துரைத்தல் இப்பாட்டின் பொருள்.

பெ

அடிகள்

(1-7) கூடிய இருளின் வாடுவது ஒன்றோ இயற்கையே பொருந்திய மலவிருளின்கண் அழுந்தி வருந்துவது ஒன்று மட்டுமோ; பீடு உயர் நின்புகழ் நாடாது ஒன்றோ - பெருமை மிகுந்த தேவரீரது அருட்புகழை விரும்பாமை ஒன்றுமட்டுமோ, றுவது அறியாச் சிறுமை ஒன்றோ - பெறுதற்குரிய நிலையை அறிந்து கொள்ளமாட்டாத சிறுமையுடையமை ஒன்று மட்டுமோ, மருவரக்கிடந்த தெரிவு இல்காலத்து - இங்ஙனம் இந்நிலைகள் எல்லாம் பொருந்தக்கிடந்த ஏழையேனது தெரிதல் இல்லாதகாலத்தில், பொருவு இல் இன்பம் தருவது குறித்து ஒப்பில்லாத பேரின்பம் அளிப்பது திருவுளங்கொண்டு, புல் முதலாகிய மெய்யில் புகுத்தி ஓர் அறிவு உறுத்தினை சிலநாள் புல் முதலான நிலையியற்பொருளுடம்பு களிற் செலுத்திப் பிறவிகளைத் தோற்றுவித்து அவ்வாற்றால் 'ஊற்றுணர்வு’ என்னும் ஓர் அறிவினைச் சிலகாலம் அறிவுறுத்தாநின்றாய்;

-

-

ஆணவமலவல்லிருள் அஃது

உயிர்களை

இருள்', இயற்கையே பிணித்திருத்தலாற் ‘கூடிய இருள்' எனப்பட்டது. ஆணவ இருள் உயிர்களை இயற்கையே பொருந்திநிற்கும் உண்மை,

66

அருளுடைய பரமென்றோ அன்று தானே

մ யானுளனென்றும் எனக்கே யாண வாதி

பெருகுவினைக் கட்டென்று மென்னாற் கட்டிப் பேசியதன்றே யருணூல் பேசிற் றன்றே”

என்று தாயுமானச் செல்வனார் (ஆகாரபுவனம் சிதம்பர ரகசியம், 29) சிக்கறுத்துத் தெளித்துக் கூறியருளிய செம்மொழிப் பாட்டால் இனிது விளங்காநிற்கும்.

'ஒன்றோ' வென்பது எண்ணிடைச்சொல்; சால்; இஃது “அறனொன்றோ ஆன்ற ஒழுங்கு” என்னுந்திருக்குறள் (148)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/166&oldid=1586910" இலிருந்து மீள்விக்கப்பட்டது