உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம் - 20

66

அடிக்குப் பரிமேலழகருரைத்த வுரையானும், மாநகர் சுடுதலொன்றோ மதனனை யழித்தலொன்றோ" என்னுஞ் சீவகசிந்தாமணிச் செய்யுளானும் அறியப்படும்.

நாடாதது எனற்பாலது ‘நாடா’ தென நின்றது தொகுத்தல்; இது தொழிற்பெயர்; 'பெறுவது' வினையாலணையும் பெயர். சிறுமை, இங்குச் 'சிறுமையுடைமை’ யென்க; உடைமையாந் தன்மை உடைமைமேல் ஏற்றிக்கூறப்பட்டது.

'வாடுவதொன்றோ,நாடாதொன்றோ, சிறுமையொன்றோ' என்பன முறையே உயிர்களின் மலமறைப்பையும், அம்மறைப் பினாலான அறியாமையையும்,

சிறுமையையும் உணர்த்தாநின்றன.

அவ்வறியாமையாலான

‘மருவர’ என்பதன்முன், 'இங்ஙனம்' அல்லது ‘இவ்வாறு’ என ஒருசொல் வருவித்துக்கொள்க. மருவரல், மருவல்; ‘கிடந்த’ வென்னுஞ் சொல் இங்குச் செயலற்றுக் கிடந்தமையினை யுணர்த்திற்று.

உயிர்கள் பிறவிக்கு வராததன்முன் ஆணவமலவல்லிருளால் முழுதும் விழுங்கப்பட்டு, அறிவுவிளக்கந் தினைத்தனையு மின்றித், தம்மையுந் தம்மையுடைய, தலைவனையுந் தம்மைவிழுங்கிய மலவிருளினையும் அறியமாட்டாமல், இயற்கையேயுணர் வில்லாக் கல்லுங்கட்டையும்போற் கிடத்தலின், அக்காலம் இங்குத் தெரிவில் காலம்' எனப்பட்டது. உயிர்களுக்கு அஃதோர் இருள்நிலையாகும். சமயச் சான்றோர் இதனைக் 'கேவலநிலை'

யென்ப.

'பொருவில் இன்பம்' வீடுபேற்றின்பம்; தருவது, தொழிற் பெயர்; குறித்து, குறிக்கொண்டு.

'புல்' என்றது இங்கு உடம்புக்கு; ஏனைய வற்றிற்கும் இஃதொக்கும்.

‘சிலநாள்' என்பது இங்கு எத்தனையோ ஆண்டுகளைக் குறியா நின்றது. ஏனைப்பல பிறவிகளின் அளவில்லாக் காலவெல்லையை நோக்கப் புன்முதலாகிய மெய்யிற்புகுத்தி ஓரறிவுறுக்கும் அளவில் நாட்கள் சிலநாட்களாயினவென்க. மேல்வருவனவும் இங்ஙனமே கொள்ளற்பாலன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/167&oldid=1586911" இலிருந்து மீள்விக்கப்பட்டது