உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

193

இனி, யோகஞ் செய்வார்க்குரியன: இயமம் நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை பொறைநிலை நினைதல் சமாதி என எட்டும்”. என அவ்வாசிரியர் ஆண்டுக் கூறியவற்றுள் ஆசனம் முதலான ஆறுறுப்பும் முறையே கூறினார். ஆசனம் என்பதற்குத் தமிழ் இருக்கை; இவை ஆறு என்பர் பிங்கலந்தை ஆசிரியர்; அவை: 'பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி, சுவத்திகஞ் சுகாதனம் என்பவாதனம்” என அவர் கூறுமாற்றால் அறியப்படும்; அவற்றுட், “பத்திராசனமாவது: விதையின்கீழேயுள்ள நரம்பின் இருபக்கங்களிலுங் காற்பரடுகளைச் சேர்த்தல்;“கோமுகமாவது: டது பொம்மையின் கீழ் வலதுகாற் பரட்டையும்வலது பொம்மையின் கீழ் இடது காற் பரட்டையுஞ் செவ்வனே சேர்த்தல்;” “பங்கயமாவது செவ்வனே கால்களை மடித்திருந்து, பின்புறமாக இரண்டு கைகளையுஞ் செலுத்தி, இரண்டுகாற் பெருவிரல்களையும் பிடித்துக்கொண்டு, நெஞ்சினுக்கு அருகே நால்விரல் இடைவெளி யிருக்குமாறு மோவாயை வைத்து மூக்கின் நுனியைப் பார்த்திருத்தல்;” “கேசரி யாவது: விதையின்கீழ் நரம்பின் இருபக்கங்களிலும் வலத்தே இடது பரட்டையும் இ டத்தே வலது பரட்டையுஞ் சேர்த்தி, முழந்தாளிரண்டின்மேல் இரண்டு முழங்கைகளையும் வைத்துக், கைவிரல்களை விரித்து, நாவை நீட்டி, ஒருமுகப்பட்ட நினைவுடன் மூக்கின் நுனியைப் பார்த்தல்;” “சுவத்திகமாவது: தொடைக்கும் முழந்தாளுக்கும் நடுவே இரண்டு அடிகளையும் ஏற்றி உடல் நிமிர்ந்து செவ்வனே யிருப்பது; எங்ஙனமிருந்தால் மனவொருமையும் இன்பமும் உண்டாகுமோ அங்ஙனமிருத்தல்.

66

சுகாதனமாவது;

இனி, ஆசிரியர் திருமூலர் எழுவகையிருக்கைகள் கூறி, அவற்றின் மேலும் எட்டும் பத்தும் அறுபத்துநாலும் நூறுமாக இருக்கைகள் பற்பல உள என்பர்; அது,

“பத்திரங் கோமுகம் பங்கயங்கேசரி

சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓர் ஏழும்

உத்தமமாம் முதுவாசனம் எட்டெட்டுப்

பத்தொடு நூறு பலவாசனமாமே

(திருமந்திரம், 593)

என அவர் அருளிச் செய்திருத்தலால் அறியப்படும். மேலே பிங்கல முனிவர் கூறிய இருக்கைமுறை பெரும்பாலும் ஆசிரியர் திருமூலர் முறையைத் தழுவிநிற்றலும் நோக்கற்பாலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/218&oldid=1586962" இலிருந்து மீள்விக்கப்பட்டது