உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

6

மறைமலையம் - 20

கடுத்துத் தனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாமையிற் றனித்த முழுமுதற் பொருளாகிய ஆண்டவனது அருள் என்னும் வெள்ளம் அளவு கடப்ப மிகுந்து நிலையுறும் இடங்களென்று உலகம் முழுமையும் அருளாகவே கண்டும், ஐம்பெரும் பூதமும் ஐம்புறம் நிறீஇ ஐவகைத்தேவும் ஆங்கு ஆங்கு அமைத்துப் பொய் முறை இன்றி மெய்முறை பரவியும் - நிலம் நீர் முதலான ஐந்து முதற்பொருள்களையும் அடி முதல் முடிகாறுமாக ஐந்திடங்களில் அமைத்து அவ்வவற்றிற்குரிய ஐவகையினரான தேவரையும் அங்கங்கும் எழுந்தருளுவித்துப் பொய்வழிகளில்லாமல் மெய்யான வழிகளில் அகவழிபா டாற்றியும், கருவியும் புலனும் புரிவின்றி நிகழ ஒரு முதற்பொருளொடும் அறிவினைக் கடவியும் மெய் முதலிய புறக்கருவிகளும் மனம் முதலிய அகக்கருவிகளுந் தத்தம் உணர்வுகளினின்றும் அவாவின்றி ஒருமுகமாய்நடைபெற ஒருமுதற்கடவுளாகிய ஆண்டவனது திருவுருவத்தோடு ஒருமித்து நிற்குமாறு தனது அறிவினைச் செலுத்தியும், இருவகை நிலையும் ஒரு முறை இறந்து மேல் நிலை நின்று வான்பொருள் உணர்ந்தும் தான் அவன் எனப் பிரித்துக்காணும் வேற்றுமை நிலையினை அவனே தானெனக் காணும் ஒற்றுமை நிலையாற் கடந்து பிறைமண்டிலத்தில் உணர்வு நிலைபெற்றுத் தூயசிவத்தோடு ஒன்றியுணர்ந்தும், ஊழி ஊழியும் ஒ இன்றிநோற்ப - ஊழி ஊழி காலமாக ஒழிதல் இல்லாமல் தவம் முயன்றும், போழ் மதிச் சடையோன் போதானாக - பிளவுபட்ட மூன்றாம் பிறையை யணிந்த சடைமுடியையுடைய சிவபிரான் தோன்றிலனாக:

தவஞ் செய்வார்க்குத் தீயிடை நிற்றல் நீரிடை முழ்கல் முதலியன உரியவாதல், 'தவஞ் செய்வார்க்கு உரியன ஊண்நசை யின்மை நீர்நசையின்மை வெப்பம்பொறுத்தல் தட்பம்பொறுத்தல் இடம் வரையறுத்தல் ஆசனம் வரையறுத்தல் இடையிட்டு மொழிதல் வாய்வாளாமை என எட்டும்; இவற்றிற்கு உணவினும் நீரினுஞ் சென்ற மனத்தைத் தடுத்தலும், ஐந்தீநாப்பணும் நீர் நிலையினும் நிற்றலுங், கடலுங் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலுந், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத் திருத்தலும், உண்டற்காலை உரையாடாமையுந், துறந்த காற்றொட்டு வாய் வாளாமையும் பொருளென்றுணர்க.” என்று உரை யாசிரியர் நச்சினார்க்கினியர் விளக்கியவாற்றால் அறியப்படும் (தொல்காப்பியம், புறத்திணையியல், 20).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/217&oldid=1586961" இலிருந்து மீள்விக்கப்பட்டது