உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

191

முருகப் பெருமானை முன்னர் 'இளையோய்' என்றதும், ஈண்டுப் பெரியோய்' என்றதும் முறையே இளமையும் பெருமை யுங் கருதியவாற்றானென்க.

6

திறம் - பக்கம்; “பெண்ணுரு வொருதிறன் ஆகின்று” என்றார் புறத்திலும் (1). ஈண்டு, வலப்பக்கம்; வேல் கைக்கொண்டது அப்பக்கத்தேயாகலின்,

வள்ளி தெய்வயானையர் தம்முள் ஒருவரை யொருவர் பொறாமையால் நோக்குதலாலுந், தங் காதலனாகிய முரு கப் பிரானை அடுத்தடுத்துக் காதலொடு நோக்குதலாலுந் திரும்பித் திரும்பி விளங்கும் பளபளப்பான அவர் தம் முகங்களின் காட்சி, பளிக்கறையு ளிருந்து காணப்படும் இருமதியங்களின் காட்சியை ஒத்திருந்ததென்றார். பளிங்கு முகத்தின் பளபளப்புக்கும், மதி முகத்திற்கும் உவமை; முறைமுறை மிளிர்தலாவது; வள்ளி இறைவனை நோக்குங்கால் தெய்வயானை அவளை நோக்குதலும், தெய்வயானை இறைவனை நோக்குங்கால் வள்ளி அவளை நோக்குதலும்.

இதுகாறும் முருகப் பெருமானைச் சிறப்பித்து விளித்த படியாம்; இனி அவன்பால் அன்பராயினார் பெருமைகளை விரிக்கப் புகுந்து, முதலிற் சூரனைக் கூறு முகத்தால் அவன் ஆற்றிய தவவொழுக்க வியல்பு கூறுகின்றார்.

(18-34) தீயிடை நின்றும் நீரிடை மூழ்கியும் மரம் மேல் இவர்ந்து தலைகீழ்த் தொங்கியும் அறுவகை இருக்கையின் நெறிபட அமர்ந்தும் - தீயின் நடுவே நின்றும் நீரினுள் மூழ்கியும் மரத்தின்மேல் ஏறி அம்மரத்தின் கிளையிலிருந்து தலைகீழாகத் தொங்கியும் ஆறு வகையான தவ விருக்கைகளில் ஒழுங்கு தவறாமல் வீற்றிருந்தும், புறம்படுத்து இழுத்தாங்கு அகம்ப நிறைத்துத் தெளிநிலை முகிழ்க்கும் வளிநிலை உழன்றும் உள்ளே உலவுங் காற்றை முதலில் வெளிவிட்டுப் பின்பு வெளிக் காற்றை உள்ளிழுத்துக் கொப்பூழின்கீழ் உள்ளேபொருந்த நிறைந்து அவ்வாற்றால் மனம் ஒருவழி நிற்றலின் அறிவு தெளிவெய்தும் நிலைதோன்றப்பெறுகின்ற மூச்சை நிறுத்தும நிலைாயில் வருந்திப் பழகியும், தன் தொழில் தபுத்துத் தனி முதற்பொருளின் அருள் எனும் வெள்ளம் வரம்பு இற மிகுந்து நிலையும் இடன் டன் என உலகெலாம் நோக்கியும் - தன் செயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/216&oldid=1586960" இலிருந்து மீள்விக்கப்பட்டது