உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

  • மறைமலையம் - 20

-

முலைப்பாலை உண்டு ஆறுவேறு திருவுருவங்களொடு விளையாடல் செய்து, ஆங்கு பின்னர் அச்சுனைக்கரையில், அம்மையும் அப்பனும் அணைய - உமைப்பிராட்டியுஞ் சிவபெருமானும் எழுந்தருள, செம்மையின் உலகு புரந்தருளும் உமை திருமடியின் இனிதாக இவ்வெண்ணிறந்த உலகங் களையும் பாதுகாத்தருளுகின்ற உமைப் பிராட்டியின் திருமடியின்கண், அறுவேறு உருவும் ஒருவடிவாகி விளையாட்டு அமர்ந்த இளையோய் அவ்வாறு வேறு திருவுருவங்களும் ஓர் உருவாகி விளையாடல் மேவிய இளைய பெருமானே;

-

முருகப் பெருமானது பிறப்பு வரலாறு கந்த புராணத்துட் கூறப்பட்டவாறே இங்குக் கூறப்படுவதாயிற்று.

அயர்ந்து - செய்து; இப்பொருட்டாதல், “களிறுமணன் அயர்பு" (பரிபாடல், 2, 33) என்புழிக காண்க.

கதம், சினம்; (புறம், 33). ‘அமர்தல்’ இங்குப் 'பொருந்துதல்’ என்னும் பொருட்டு, "வள்ளியொடு நகையமர்ந்தன்றே' (திருமுருகாற்றுப்படை, 102) என்புழிப் போல.

(9 - 17) உழைப் பிரிந்து பின்பு ஆங்கு நின்றும் பிரிந்து, நற்றவர் ஓங்கும் ஒற்றிமாநகர் - நல்ல தவமுடைய மேன் மக்கள் சிறந்தோங்குகின்ற திருவொற்றி மாநகரின்கண், வெற்றி வைவேல் ஒரு திறம் பொலிய- வெற்றிதருங் கூரிய வேல் ஒருபால் விளங்க, பளிக்கறை புகுந்த ஒளிப்பரு மதியின் முறைமுறை மிளிர்ந்து நிறைகவின் பொழியும் திருமுகச்செல்வியர் இருபுறம் விளங்க - பளிங்குச் சுவரானமைந்த ஓர் அறையின் உட்புகுந்த ஒளித்தல் அரிய மதியம் பேல் முறை முறையே ஒளிவிளங்கி நிறைந்த அழகினைச் சொரிகின்ற அழகிய முகத்தினையுடைய வள்ளி தெய்வயானையர் இருபக்கங்களிலும் விளங்க, உலகு எலாம் விழுங்கும் அலகிலா வன்திறல் களிக்கரு மஞ்ஞையில் நலப்பட அமர்ந்து உலகங்களெல்லாவற்றையும் ஒருங்க விழுங்கவல்ல அளவில்லாத வலிய ஆற்றலமைந்த களிப்பினையுடைய கரிய மயிலின்மேல் அழகாக எழுந்தருளி, என்விழி எதிர் தோன்றிய அழியாப் பெரியோர் - கண்முன்னே தோன்றியருளிய அழிதலில்லாத பெரிய பெருமானே என்பது.

எனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/215&oldid=1586959" இலிருந்து மீள்விக்கப்பட்டது