உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

189

நின்னை ஒறுத்ததனாலேயே நின்னுடல் வளையப்பெற்றனை யென்றாள்; இது தற்குறிப்பேற்றம், என்னை? இயற்கையாய் அமைந்த தாழையின் வடிவுக்குத் தலைமகள் தான் கருதிய குறிப்பினை ஏற்றிக் கூறினமையின்; தமிழ்த்தண்டியாரும்,

"பெயர்பொருள் அல்பொரு ளென இருபொருளினும் இயல்பின் விளைதிறன் அன்றி அயலொன்று தான்குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம்”

என்றார் (தண்டியலங்காரம், பொருளணியியல், 28). “தன்னுட் கையா றெய்திடுகிளவி” யாகிய இதனைத் திருவாதவூரடிகள்,

'விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் டில்லைமெல் லங்கழிசூழ் கண்டலையே கரியாக் கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்க் கண்டிலையே வரக் கங்குலெல்லாம் மங்குல்வாய் விளக்கும் மண்டிலமே பணியாய் தமியேற் கொரு வாசகமே'

எனத் திங்கள்மேல்

(திருக்கோவையார், 177).

வைத்தருளிச் செய்தமை

காண்க

இவ்வுலகவாழ்க்கையினூடு நின்று இறைவன் றிருவருளின் பத்தை ஒரோவொருகால் நுகரும் ஒரு புலவன் அதனை யிடையறாது பெற்று நுகரும் வேட்கையால் இங்ஙனங் கூறியதாக இதற்குப் பேரின்பப்பொருள் உரைத்துக்கொள்க. புலவன் தலைவி, இறைவன் தலைமகன், புன்னையங்கானல் வீட்டுலகம், தாழை விந்துமாயை; பிறவும் இங்ஙனமே ஒட்டிக்கொள்க; விரிப்பிற் பெருகும். (18).

19. அருணிலைபெறுத லரிதென மொழிதல்

(1-9) கேதகை பழித்த மாது ஒரு கூறற்கு - தாழம்பூவை வெறுத்த உமையொருபாகராகிய சிவபெருமானுக்கு, நுதல் கிழித்து இமைக்கும் கதம் கெழு விழியில் - நெற்றியைப் பிந்து ஒளிவிடுகின்ற சினம் பொருந்திய விழியில், பொறிஎனத் தோன்றி - தீப்பொறிபோற் றோன்றி, வெறிகமழ் சுனையில் அறுவர் ஊட்டிய நறும்பால் மாந்தி அறுவேறு உருவின் ளையாட்டு அயர்ந்து - மலரால் மணங் கமழ்கின்ற இமயச் சுனையிற் கார்த்திகைப் பெண்கள் அறுவரும் ஊட்டிய இனிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/214&oldid=1586958" இலிருந்து மீள்விக்கப்பட்டது