உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

  • மறைமலையம் - 20

சொல்லிப்

ஏட்டினால் அருள்செயத்தக்க எமது உயிரினைப் பிளந்து வருத்தும் வகையும் அல்லாமல், கோளான புணர்ந்தார் கரியும் குறிப்பு அறியாய்

-

தம் மனத்தின்கண் உள்ளது ஒன்றாகப் பிறிதொன்று சொல்லி மகிழ்வித்து எம்மைப் புணர்ந்தவர்க்குச் சான்றாக நீ நின்ற குறிப்புத் தானும் அறிந்திலை, கேள்ஆன மெய்யும் முடங்கும் ஒற்றிக் கழிக் கேதகையே அதனால் நினக்கு உறவான உடம்பும் கூனாகி வளையப்பெற்ற திருவொற்றிமா நகர்க் கடற்கரையடுத்த கழிக்கானலில் நிற்குந் தாழஞ்செடியே என்றவாறு.

நாள் - விடியற்காலை; “நாள் ஆ தந்து” என்புழி (பெரும் பாணாற்றுப்படை,141) இச்சொல் இப்பொருட்டாதல் காண்க; 'நாளால்' நாளில் என ஏழன் பொருளில் மயங்கியது. ‘மனக்கு என்பது அத்துச்சாரியையின்றி வந்தது; “நலக்குரியார் யாரெனில்’ (திருக்குறள்,149) என்புழிப்போல.

தாழம்பூவின்ஏடு, வாள்போற் கூர்ம்பற்கள் வாய்ந்திருத் தலின், 'வாளார்மடல்' எனப்பட்டது.

காதலனைப் பிரிந்து ஆற்றாதே வருந்தும்யாம் நின்னால் ரங்கி அருளற்பாலேம் என்பது குறிப்பிப்பாள் ‘அளியேம்’ என்றாள்.

லைக்

உடம்பை மட்டுமே பிளக்கவல்ல நினது LOL கொண்டு எமதுயிரையும் நீ போழவல்லையாயது அறக்கொடி தென்பாள் ‘உயிர் போழ்வகை' என்றாள்.

காதலன் சொன்ன கோளாவது: “நின்னிற்பிரியேன், பிரியின் ஆற்றேன்” என்பது. கரி - சான்று. நெய்தல்நிலத்துக் கானற் சோலையின் கண்ணதான ஒரு புன்னைமர நீழலிலே எம்மை எங்காதலர் புணர்ந்தபோது அதனைச் சான்றாகக் கண்டு நின்ற ற நீ, திரும்ப எங்காதலர் இருங்கு வந்து நின்றபோது, அவர்க்கு எமது பிரிவாற்றாமையினைச் சொல்லாதுவிட்ட வன்கண்மை, எமது யிரைப்போழும் வன்கண்மையினுங் கொடிதென்பாள் 'கோளான சொல்லிப் புணர்ந்தார் கரியுங் குறிப்பறியாய்' எனக் கடிந்துரைத் தாள். சொன்னசொல்லை நம்பி ஏமாந்த எம் பக்கல்நின்று நீ சான்று பகரவேண்டுவதாயிருக்க, அது செய்யாது செய்யாது பொய்கூறிய பொய்கூறிய அவர் பக்கலாக நின்று வாய்வாளாதிருந்த நின் வன்கண்மை யினை அறக்கடவுள் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/213&oldid=1586957" இலிருந்து மீள்விக்கப்பட்டது