உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

187

எழுந்தருளி யிராநின்ற விடையுடைய பெருமானுக்குப் புதல்வ! என நா ஆர வாழ்த்தி நடம்புரிவாய் என்று நாத்தழுதழுப்ப வழுத்திக் களிப்பாற் கூத்தாடுவாயாக வென்பது.

நெஞ்சிற்கு நலம் இன்மையாவது: அழுக்காறு அவா வெகுளி யுடையதாதல்; தன்னைவியத்தலாவது; நெஞ்சு தனக்கில்லாத நலனை இருப்பதாகக் கருதித் தன்னை நன்குமதித்தல்; அது பிழை செய்தலாவது; தன் உண்மை நிலை உணராமையிற் பிறருடைமை கண்டு அழுக்கறுத்தலும், அதனைக் கவர்ந்துகொள்ள அவாவு தலும், அதற்கிடையூறு செய்வார்மேல் வெகுளுதலும் ஆகும். இத்துணைத் தீய இயல்புள்ள நினக்கும் இரங்கி றைவன் நின்முன்னே அருள்செயவருங்கால், அத் தீயஇயல்புகளை அவனை வாழ்த்தி வணங்குதலிலேயே நின் எண்ணத்தைச் செலுத்தக் கடவாய் என்றவாறு.

அறவே மறந்து,

சே-காளைமாடு; அதன்மேல் இவருஞ் சிவபிரான் 'சேவார்’

எனப்பட்டார்.

சொல்வது கேட்டுத் திருந்துதல்வேண்டி ‘நல்நெஞ்சு எனநயம்பட உரைக்கலாயிற்று. ஆஆ 'ஆவா' ஆயின; வியப்புக் குறி. (17).

18. தன்னுட்கையா றெய்திடு கிளவி

தலைவி தன்னை வரையாது களவின்கண் வந்து ஒழுகுந் தன் தலைவனால் தனக்கு நேர்ந்த தாழைமேலிட்டு வருந்திக் கூறுவது.

துன்பத்தை

“நாளான் மலர்ந்து மனக்கினி யான்சென்ற நாளறிந்து வாளார் மடலி னளியே முயிர்போழ் வகையுமன்றிக் கோளான சொல்லிப் புணர்ந்தார் கரியுங் குறிப்பறியாய் கேளான மெய்யு முடங்குமொற் றிக்கழிக் கேதகையே.’

وو

ஒரு

(இ-ள்) நாளால் மலர்ந்து விடியற்காலையே மலர்ந்து, L மனக்கு இனியான் சென்ற நாள் அறிந்து - எமது உள்ளத்துக்கு இன்பம் அளிப்பவனான எம் தலைவன் எம்மை விட்டுப் பிரிந்து சென்றநேரந் தெரிந்து வாள்ஆர் மடலின் அளியேம் உயிர்போழ் வகையும் அன்றி

6

-

வாளை ஒக்குங் கூரிய நினது மலரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/212&oldid=1586956" இலிருந்து மீள்விக்கப்பட்டது