உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

எல்லாம்வல்ல

ஒக்குமென்பது.

மறைமலையம் 20 இறைவனது ன்னருளை

ஒருவாற்றால்

அறிவும் அவாவும் (1) பலதிறப்படும் (2); உண்டாங்கு ஆனாது உறைவோர் அளவிலர் (14-5); கண்டு மெய்யென அறிவு மாழாந்து வாழ்வோரும் பலர் (52-3); உறங்கும் வாழ்க்கையிற் பிறங்குவோர் பலர் (65); ஓசையுஞ் செவிவாய் மாந்திச் சிறந்தோரும் பலர் (75); வறிதின் வாழும் மக்களும் பலர் (83); பொய்படு மின்பத்து மெய்படத் துளங்கும் விழலரும் பலர் (86- 7); செய்வதறியாக் கையரும் பலர் (93); இவ்வாறொழிந்தனர் போகச் செவ்விய மெய்ப்பொருளுணர்துமென் றொப்புடன் புகுந்து (94-95) பொன்றிய மாக்கள் மணலினும் பலர் (111); ஆங்ஙனம் ஒழிந்த அளவில் மாந்தருள் யானும் ஒருவனாக நோனாது (112-3) வேறு பிரித்தெடுத்துச் (114), சோமசுந்தர குருவனொடு கூடடி (118), இ இன்பமென்பது (119) நின் திருவடித்தாமரையது என மொழிவித்து என்னையும் உய்யக் கொண்டு பின்னும் (125-7) ஒற்றிமா நகரின்கண் (142) காண்டகுகோலந் தழீஇ என் கண்ணெதிர் பொலிந்த நின் இன்னருள் நினைப்பின் (158-9) தாயின் அருளினும் பெரிதே (162) என இச்செய்யுள் கொண்டு முடிதலின் இறைவனது அருணிலையினை அடிகள் இதன்கண் இனிது விளக்கியவாறு கண்டுகொள்க.(16).

17. நெஞ்சறிவுறுத்தல்

"தேவா திருவொற்றிச் சேவார் புதல்வவென நாவார வாழ்த்தி நடம்புரிவா - யாவா

வியந்து பிழைசெய்யு நன்னெஞ்சே வேலோ னயந்து னெதிர்தோன்று நாள்.

(இ-ள்) ஆஆ வியந்து பிழைசெய்யும் நஞ்நெஞ்சே ஆஆ! வியக்கத்தக்க நலம் இல்லாத நீ அந்நலம் உடையைபோல் நின்னை நீயே பாராட்டி அதனாற் பிழையாவன செய்யும் நல்லநெஞ்சமே, வேலோன் நயந்து உன் எதிர்தோன்றும் நாள் - வேல்தாங்கிய முருகப்பெருமான் விரும்பி உனக்கு எதிரில் தோன்றுகின்ற நாளில், தேவா -ஒளிவடிவாகிய பெருமானே, திருவொற்றிச் சேவார் புதல்வ

-

திருவொற்றியூரின்கண்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/211&oldid=1586955" இலிருந்து மீள்விக்கப்பட்டது