உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

185

'முகத்தின் இருவிழி யென்பதை ஆறன்றொகையாகக் கொள்ளலுமாம். ஆயினும் உவமிக்கப்படும் பொருட்டொடர் மஞ்ஞையிற் கிடந்தவென ஏழாவதாய் வருதலின், இவ்வுவமப் பொருட்டொடரும் அவ்வேழன் றொகையாய் வரப் பொரு ளுரைத்தலே சிறக்குமென்பது. ‘மலர’ வென்றது, மலர்ந்தாற்போற் றோன்ற வென்றற்கு.

15)

‘அஞ்ஞையர்’ அம்மையர் என்னும் பொருளுடையது; "மென்றோள் அஞ்ஞை சென்றவாறே" (அகநானூறு, என்பதன் பழைய வுரையைக்காண்க.

‘அருடருகையும்' என்பதன்பின் ‘கொண்டு' என ஒருசொல் வருவித்துக்கொள்க.

'தழீஇ' யென்னும் வினையெச்சம் மேலடியில் வரும் பொலிந்த வென்னும் பெயரெச்சம் கொண்டு முடிந்தது.

ன்

(158-162) மாண்தக என் கண்ணெதிர் பொலிந்த நின் அருள் நினைப்பின் - மாட்சிமைப்பட ஏழையேனுடைய ஊனக் கண்களின் எதிரில் விளங்கிக் காட்சி கொடுத்தருளிய தேவரீரது இனிய திருவருளை எண்ணினால், வய உறு நோயும் பாராது ஈன்ற புதல்வோன் கண்டுகளிக்கும் சிதைவு இல் தாயின் அருளினும் பெரிது - கருவுயிர்க்கும் நோயினால் உண்டாகும் துன்பத்தையும் எண்ணாமல் தான் ஈன்றெடுத்த புதல்வனைப் பார்த்து மனம் மகிழ்கின்ற கெடுதலில்லாத தாயினது அருளினும் மிகப் பெரியதாகுமென்பது.

மாண்தக, மாட்சிமை ஏற்க என்றது மாட்சிமைப்பட

‘வயா’ கருவுயிர்க்குங்கால் உண்டாகும் வயிற்றுளைவு (பிங்கலந்தை, 10 :999); ‘வயுாவுறு நோய்' என்றது, இங்கு அவ் வயிற்றுளைவினால் உண்டாகுந் துன்பம், பாராது, எண்ணாமல்.

தாய்மை மாறாதவள் என்றற்கு அவள் “சிதைவில் தாய்" எனப்பட்டாள். உம்மை உயர்வின் மேற்று.

குழந்தைகள் எத்துணைதாம் தீங்குகள் உடையவாயினும் அவற்றைச் சிறிதும் பாராட்டாமற் பரிவுகூர்தலானும், அப்பரிவு கூர்தறானுங் கைம்மாறு கருதாமல் நிகழ்தலானும், அங்ஙனம் நிகழ்ந்தவழியும் அஃது இயற்கையா யெழுதலானந் தாயின் அருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/210&oldid=1586954" இலிருந்து மீள்விக்கப்பட்டது