உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

  • மறைமலையம் - 20

இருவிழியென்ன மஞ்ஞையில் கிடந்த இருதாள் மலர நீலமேனியை யுடைய திருமாலின் முகத்திற் செந்நிறமான இரண்டு கண்மலர்கள் அமைந்து விளங்கினாற்போல்

நீலநிறத்தினையுடைய மயிலின் உடம்பின்மேற்றங்கிய இரண்டு திருவடிகளும் மலர்ந்து தோன்ற, அஞ்ஞையர் இருவரும் இருமருங்கு இருப்ப - வள்ளியுந் தெய்வயானையும் என்னும் அம்மையர் இருவரும் வலத்திலும் இடத்திலுமாக ரண்டு பக்கங்களிலும் விளங்க, அமைத்த கையும் அருள் தரு கையும் மவமாயைகளிற் கிடந்து நிரம்பவுந் துன்புற்றுக் களைகண் இன்றித் துடிக்கும் எண்ணில் உயிர்கட்கும் அஞ்சேல்' என அமைத்துக்காட்டுந் திருக்கையும் பின்னர் அங்ஙனமே அச்சந்தீர்ந்துத் தன்பால் அணுகுவிக்கும் ஆருயிர்கட்கு அருள் தருகின்ற திருக்கையுங் கொண்டு, இமைப்பது இல்லாத் தேவரும் பிறரும் கண்டுகண்டு உவப்பக் கவின்று நனிவிளங்கும் காண்டகு கோலம் தழீஇ- விழிகள் இமைத்தல் இல்லாத விண்ணவரும் அவர் அல்லாத மற்றை மண்ணவரும் விடாமற் பார்த்துப் பார்த்து மனமகிழும்படி அழகுற்று இங்ஙனம் மிகவிளங்குங் காண்டற்கு ஏற்ற திருக்கோலம் பொருந்தி;

‘தலைத்தலை' யென்றது, மேலுக்குமேல் மிகுதிப்பட என்னும் பொருட்டு; “தாழ்விலுள்ளந் தலைத்தலை சிறப்ப என்றார் அகநானூற்றிலும் (29).

குன்றுக்குக் கொழுமையாவது: 'தக்கோலந் தீம்பூத் தகை சால் இலவங்கங், கர்ப்பூரஞ் சாதியோடைந்து” (சிலப்பதிகாரம், 5, 26) என அடியார்க்குநல்லார் காட்டிய ஐம்பொருள்வளன்

உடை

மை.

அருளருவி பன்னிருதோட் குன்றிற் பன்முகம் பரந்து செல்லலாவது: தன்னைச் சுற்றியுள்ள எல்லா உயிர்கட்கும் எம்முகத்தும் அருள் செய்தல்.

‘மூய்', மூடி; ‘மூடியிருந்து வேவதோர் கொள்கலம் மூய் திறந்த விடத்து” (18-ம் நூற்பாவுரை) என்பது இறையனாரகப் பொருளுரை.

‘அரம் பொரு வைவேல்' எனப் பிள்ளையார் கைவேலுக்கு அடை கொடுத்தல் ஆகாதேனும் வேல் என்னும் பொதுமை நோக்கி அது கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/209&oldid=1586953" இலிருந்து மீள்விக்கப்பட்டது