உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

183

'சிறுதே ருருட்டிவிட்டுவிட் டிசைக்கும் மட்டில் கம்பலை' யெனக் கொள்க. உருட்டுதலால் இசைக்குங் கம்பலையெனப் பொருள் தோன்ற நிற்றலின், 'உருட்டி' யென்னும் வினையெச்சம் இங்குக் காரணப்பொருளதாம்.

‘கழகம்' என்பது கலைபயிலிடம்.

வருத்தந்

பெரியோர் பெருந்தேர் உருட்டுங்கால் தெரியாமைக்காகக் கைகொட்டியும் வாய்ப்பாட்டு இசைத்தும் பறைமுழக்கியும் ஒலிசெய்வர்; சிறிதுதொலைவு தேர் உருண்டு சென்று வழியில் முட்டுண்டு நின்றக்கால் மீண்டும் அங்ஙனமே அவர் ஒலிசெய்யாநிற்பர்; அவரை ஒப்பவே சிறாரும் விளையாட் டாய்ச் சிறுதேர் உருட்டும் போது விட்டுவிட்டு ஒலிசெய்து மகிழ்வராகலின், ஈண்டுச் சிறுதேர் உருட்டிவிட்டுவிட்டிசைக்கும் ‘மட்டில்கம்பலை' யென்றார்.

L

மட்டென்பது அளவு; "மதுவும் அளவும் மட்டெனலாகும்" என்பது பிங்கலந்தை.

‘நகர்' என்புழி'நகரின்கண்' என ஏழனுருபொன்று விரித்துக்

கொள்க.

-

(143 - 158) தாவா இளமை தலைத்தலை சிறப்ப கெடாத கட்டிளமை மேலுக்குமேல் மிகுதிப்பட, பன்னிரு விழி எனும் கண்ணகன் சுனையில் அருள் எனும் அருவி விரிவுறப்பெருகி முழவுத்தோள் எனும் கொழுவிய குன்றில் பல்முகம் பரந்து தண்எனச் செல்ல - பன்னிரண்டு விழிகள் என்னும் இடம் அகன்ற நீர்ச்சுனையில் அருள் என்னும் நீர் அருவி மிகவும் பெருக்கெடுத்து முழவினை ஒத்த தோள் என்னுஞ் செழுமையான மலையின் மேற்பலமுகமாகப் பரவிக் குளிர்ச்சிமேவி யொழுக, நித்திலம் பெய்த விழுத்துவர்ச் செப்பின் மூய் திறந்தன்ன வாய்நகை தோன்ற ற முத்துக்கள் வரிசையாய்ப் பெய்து வைக்கப்பட்ட மேலான பவளத்தினாற் சமைக்கப்பட்ட சிமிழின் மூடி திறந்தாற்போன்ற வாயின்கண்ணே பற்கள் தோன்றா நிற்ப, வரைவிலங்கி ஓடும் மின்னேபோல அரம்பொரு வைவேல் உரம் கிடந்து ஒளிர ஒருமலையினைக் குறுக்கிட்டு ஓடும் மின்னற் கொடியை ஒப்ப அரத்தால் அராவப்பட்ட கூரிய வேற்படை மார்பின் குறுக்கே கிடந்து ஒளிசெய்ய, திருமால் முகத்தின்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/208&oldid=1586952" இலிருந்து மீள்விக்கப்பட்டது