உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மறைமலையம் - 20

பால்கெழு தன்மையின் பலவேறு அழீஇ நீல்நிற முகிலில் மறையும் மின்போல் நீர்மூழ்கு ஆடும் பேர்வுஇல் ஆர்ப்பு ஒலியும் சிறிய நெற்றியுங் கரியகண்ணுங் குறியவளையலும் உடை இளமகளிர் தமது இளமுலை முன்றிலில் முந்தின இரவு தங் காதற்கணவராற் கழும அப்பித் தொய்யிலு மெழுதப்பட்ட குங்குமப்பூக் கலந்த செஞ்சந்தனச் சேற்றையும் நறுமணம்வீசும் கூந்தல் முடிப்பு களையும் அவை பலபகுப்புகள் பொருந்திய வியல்பினால் அவற்றைப் பல்வேறு முறையாக அழித்துக் கழீஇக் கருநீல நிறம்வாய்ந்த புயலினிடையில் மறைந்துஒளியும் மின்னற் கொடிகளை ஒப்ப நீரில் மூழ்குதல் செய்யும் நீங்குதல் இல்லாத ஆரவாரிப்பொலியும், திருவின்செல்வி அருமையின் பெற்ற குறுநடைச்சிறுவர் சிறு தேர்உருட்டித் திறல்கெழுமறவர் மல் பயில் கழகத்துக் கைபுடைத்து ஆர்க்கும் இசையினும் சிறந்து விட்டுவிட்டு இசைக்கும் மட்டில் கம்பலையும் - திருவுக்குச் செல்வியாகிய திருமகளை யொத்தமகளிர் அருமையாற்பெற்ற சிறிய நடையினை யுடைய சிறார்கள் சிறியதேரைத் தெருவில் உருட்டுதலால் வலிமை பொருந்திய மறவர்கள் மற்போர் பழகுகின்ற கழகத்தில் தம்முடைய தோள்களிற் கைதட்டி ஒலிசெய்யும் ஓசையினும் மிகுந்து இடைவிட்டுவிட்டு ஒலிக்கும் அளவில்லாத ஓசையும், ஒவாது கறங்கும் ஒற்றிமாநகர் - ஓயாமல் ஒலிக்குந் திருவொற்றி மா நகரின்கண்;

வைகறை உணர்த’லாவது வைகறையில் துயிலுணர்தல்; 'குடைதல்' இங்கு நீராடுதலென்னும் பொருட்டு; "உரையினி மாதராய்". "புனல்குடைந்து’ (சிலப். குன்றக்குரவை,) என்பதிற்போல; ஓதையும் ஓசையும் ஒன்று.

‘நீல்’ கடைக்குறை; ‘மின்' மகளிர்க்கும், 'முகில்' கூந்தற்கும் உவமமாகக் கொள்க. எனவே 'நீலவான்' நீருக்கு உவமையாதல் கூறாமலே பெறப்படும். 'மூழ்காடு' ஒரு சொல் நீர்மையுமாம்.

செல்வக் குடியிற் பிறந்த சிறாரென்றற்குத் 'திருவின்செல்வி அருமையிற்பெற்ற சிறுவர்' என்றார்; செல்வி, சிறார் என்பன ஒருமையிற் பன்மைமயக்கம்; ஏவலிளையர் தாய்வயிறு கரிப்ப என்று சேனாவரையர் காட்டியதூஉங் காண்க; (தொல்காப்பியம், எச்சவியல், 65).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/207&oldid=1586951" இலிருந்து மீள்விக்கப்பட்டது