உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

181

றென்பதும், ஆனால் எல்லாம் வல்ல பேரறிவுப் பொருளாகிய இறைவன்ற ன் ணையடியின்பமே இன்பமென்பதும்

மேலடிகளால் உணர்த்தப்படுகின்றன.

வண்டுக்கூட்டங்கள் தாமரை மலரை வேட்கையுடன் மொய்த்து அதன்கண் இருந்து பெருக்கெடுத்துவழியும் இனிய நறுந்தேனை ஆர்வமுடன்உண்டு பெரிது மகிழ்தல்போல, அடியவர் கூட்டமுந் தடுக்கொணா அன்புடன் இறைவன் றிருவடிமலர்களைச் சூழ்ந்து கொண்டு ஆண்டுப் பெருகும் பேரின்ப ஆரமுதை ஆரஉண்டு, அவ்வின்பவெள்ளத்திற் றிளைக்குமாகலின், தொண்டரினம் இங்கு வண்டினமாக உருவகப்படுத்தப்பட்ட இங்ஙனமே தாண்டரினங்களை வண்டினங்க ளாகவும், இறைவன்நல்கும் பேரின்பப் பேற்றை அவ் வண்டினங்கள் நுகருந் தேனாகவும் வைத்துச் சேக்கிழார் பெருமான்,

தென்க.

மன்று ளாடுமது வின்னசை யாலே மறைச்சு ரும்பறை புறத்தின் மருங்கே, குன்று போலுமணி மாமதில் சூழுங் குண்டகழ்க்கமல வண்டலர் கைதைத் துன்று நீறுபுனை மேனியவாகித் தூய நீறுபுனை தொண்டர்க ளென்னச், சென்று சென்று முரல் கின்றன கண்டு சிந்தை யன்பொடுதிளைத்தெதிர்

சென்றார் (திருத்தொண்டர் புராணம், தடுத்தாட், 96)

என்று மிக அழகாக விளக்கிக் கூறுதல் பெரிதும் நினைவுகூர்ந்து மகிழற்பாலது.

கொண்டி,கொள்ளை; “தொல்கொண்டித் துவன்றிருக்கை’ யென்னும் பட்டினப்பாலையில் (212) இச்சொல் இப் பொருட் டாதல் காண்க.

L

(128- 142) மறை நவில் அந்தணர் வைகறை உணர்ந்து வாவிகுடைந்து ஆர்க்கும் தீவிய ஓதையும் - தேவார திருவாசக மென்னுந் தமிழ் நால்வேதங்கள் ஓதுஞ் சிவ அந்தணர் விடியல் நேரத்தில் துயிலுணர்ந்து திருக்குளத்தில் நீராடி ஒலிக்கும் இனிய ஓசையும், தாமரைப் பள்ளித் துயில் உணர் புள் இனம் பார்ப்பொடு கெழீஇச் சிலம்பும் ஓசையும்- தாமரை மலராகிய அணையினின்றுந் துயிலெழுந்த பறவைக் கூட்டங்கள் தத்தங் குஞ்சுகளுடன் கூடி ஆர்க்கும் ஒலியும், சிறுநுதல் கரும்கண் ன் குறுந்தொடிமகளிர் குங்குமச்சாந்தும் கொங்கு உலாம் கூந்தலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/206&oldid=1586950" இலிருந்து மீள்விக்கப்பட்டது