உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

-

  • மறைமலையம் - 20

லாததோ ரியல்போவெனின் அதுவும் அன்று, தொண்டர் எனும் வண்டினம் குழுமிக் கொண்டிகொள்ளும் நின் திருவடித் தாமரையது மற்றுத் தொண்டர்கள் என்னும் வண்டுக் கூட்டங்கள் ஒருங்குகூடிக் கொள்ளைகொள்ளுந் தேவரீரது திருவடியாகிய தாமரைமலரின் கண் உள்ளதே அவ்வின்பமாம், என மொழிவித்து என்னையும் உய்யக்கொண்டு -என்று திருவாய் மலர்ந்து அறிவுறுக்கும்படி செய்து ஒன்றுக்கும் பற்றாத ஏழையேனையும் உய்ய ஆட்கொண்டு, பின்னும் - மேலும்,

'முரணி' யென்பதை ‘முரண' வெனத் திரித்துககொள்க. ‘துய்ப்பதோ’வென்னும் ஓகாரம் ஐயப்பொருட்டு; ஏனையவும்

அன்ன.

நிலையாப் பருப்பொருள்களாயுங் கருவிகளாயும் உள்ள மெய்முதலிய ஐம்பொறிகள் அங்ஙனமே நிலையாப் பருப் பொருள்களாயுங் கருவிகளாயும் உள்ள மண்முதலான ஐம்பெரு முதற்பொருள்களையே பற்றி நுகருமியல்பினவாகலின், அங்ஙன மவற்றால் நுகரப்படும் இன்பமும் அவ்வாறே நிலையாததாயும் மற்றோரின்பத்துக்குக் கருவியாயு மிருக்கும் பெற்றியதே யல்லாமல் என்றும் அழியாததாயும் முடிந்த நிலையினதாயும் இருக்கும் நிலையிற்றன்று. ஆதலால் இவ்வைம்பொறிகளானுந் துன்பத்துக்கு முரணாக நுகரப்படும் இன்பம் இ இன்பமாகாதென்பது தெளியப்படும். இது பருப்பொருள்களை நுகர்வதால் விளையும் இன்பவியல்பு கூறியபடியாம்.

து

முடிந்த

இனி, மடவாரது இதழ் சுவைத்து நுகருமின்பம் அறிவுப் பொருளொடு கூடி நுகருமின்பமாம். என்னை? இதழென்னும் அறியாமைப் பொருளைச் சுவைப்பதனாலேயே அவ்வின்பம் எழுவது போற் றோன்றுமாயினும், மடவாரது உயிர் என்னும் அறிவுப் பொருள் இல்லாக்கால் அவ்விதழ்ச்சுவையினால் ஆண்டு ஏதோரின்பமும் பிறவாதாகலானும், உண்மையில் அவ்வறிவுப் பொருளின் அன்புகாரணமாகவே ஆண்டு அவ்வின்பம் நுகரப் படுதலானுமென்பது. இது சிற்றறிவு உயிர்களொடு சிற்றின்பவியல்பு புலப்படுத்தியவாறாம்.

கூடிநுகருஞ்

இனிப் புறப்பொருட்டொடர்புகள் ஏதுமின்றித் தன்னியல் எழுவதுதான் இன்பமோவெனின் அதுவுமன்

பினானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/205&oldid=1586949" இலிருந்து மீள்விக்கப்பட்டது