உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

195

முழந்தாள் முதல் எருவாயில் வரையிலுள்ள இடம் நீரின் ம் பகுதியாகும்; எருவாயில்முதல் நெஞ்சம் வரையிலுள்ள இடந் தீயின் பகுதியாகும்; நெஞ்சம் முதற் புருவநடுவு வரையிலுள்ள பகுதி காற்றின்பாற் படும்; புருவநடு முதல் தலையின் உச்சி வரையிலான இடம் வான்பகுதியிற் சேர்ந்ததாகும். இவ்வாறு ஐம்பூதப் பகுப்பில் அடக்கப்பட்ட இவ்வுடம்பினுள் நிலத்தின் பகுதியில் நான்முகக் கடவுளையும், நீரின் பகுதியில் திருமாலையும், நெருப்பின்பகுதியில் உருத்திரப் பெருமானையுங், காற்றின் பகுதியில் மகேசுவரனையும், வானின்பகுதியில் சதாசிவக் கடவுளையும் வைத்து நினைவளவில் வழிபாடு ஆற்றுதலே 'தாரணை' என்னும் பொறைநிலை யாகுமென்று யோகதத்து வோபநிடதங் கூறாநிற்கும். ஆசிரியர் திருமூலர்,

“அரித்தவுடலை யைம்பூதத்தில் வைத்துப் பொருத்த வைம்பூதஞ் சித்தாதியிற் போந்து தெரித்த மனாதி சத்தாதியிற் செல்லத் தரித்தது தாரணை தற்பரத்தோடோ”

எனத் தாரணையின் இயல்பைத் திருமந்திரத்தில் (597) எடுத்தோதினார். நச்சினார்க்கினியர், தாரணை யென்னும் பொறைநிலைக்கு யொரு வழிநிறுப்பது

'மனத்தினை

பாறையே' எனவும், அதன்பிற் போந்த தியானம் என்னும் நினைவுநிலைக்கு,

“நிறுத்திய அம்மனம் நிலைதிரியாமற்

குறித்த பொருளொடு கொளுத்தல் நினைவே

எனவும், அதன் பிற்போந்த சமாதி என்னும் இரண்டற்றநிலைக்கு,

66

“ஆங்ஙனங் குறித்த அம்முதற் பொருளொடு

தான் பிறன் ஆகாத் தகையது சமாதி”

எனவும் உரைச்சூத்திரங்கள் வகுத்தமை காண்க.இவற்றின் விரிவுகள் 'யோகதத்து வோபநிடதத்’துந், 'திருமந்திரத்'துங் கண்டுகொள்க. விந்து வென்னும் மின்னொளி மண்டிலம் எருவாய்க்குங் குறிக்கும் நடுவேயுள்ள மூலத்துக்குமேல் நிலவுவதெனவும், நாதம் என்னும் பிறை மண்டிலந் தலையுச்சிக்கண் நிற்பதெனவும், இவையிரண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/220&oldid=1586964" இலிருந்து மீள்விக்கப்பட்டது