உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் - 20

டற்கும் இடையே தொடர்ந்து நிற்குஞ் சுழுமுனை யென்னும் அனல் நாடியின் ஊடே விந்துவினொளி மேலெழுந்துசென்று உச்சிக் கண்ணதான பிறை மண்டிலத்தை அளாவ அவ்வளாவு தலில் உணர்வு தோய்ந்து ஒன்றி யுருகித் தன்னை விழுங்கிக் கிளரும் சிவவொளியாய் உயிர் நிற்கப் பெறுதலே சமாதியாமெனவும் ஆசிரியர் திருமூலர்,

“விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற் சந்தியிலான சமாதியிற் கூடிடும்

அந்தம்இலாத அறிவின் அரும்பொருள் சுந்தரச் சோதியுந் தோன்றிடுந்தானே”

என்று திருமந்திரத்தில் (619) அருளிச்செய்திருத்தல் நினைவிற் பதிக்கற்பாற்று.

தபுத்தல்-கெடுத்தல், “உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்து என்னும் பதிற்றுப்பத்தில் (13, 18) இச்சொல் இப்பொருளில் வருதல்காண்க.

'பொய்ம்முறை இன்றி மெய்ம்முறை பரவு’ தலாவது; நான் முகனை அவற்குரிய நிலையிலன்றி அவற்குமேற்பட்ட திருமால் நிலயில் வைத்து வணங்காமையுந், திருமாலை அவற்குரிய நிலை யிலன்றி அவற்கு மேற்பட்ட உருத்திரன் நிலையில் உயர்த்து வைத்து வணங்காமையும், உருத்திரனை அவற்கு மேற்பட்ட மகேசுரன் நிலையிலும் மகேசுரனை அவற்கு மேற்பட்ட சதாசிவன் நிலையிலுஞ் சதாசிவனை அவற்குமேற்பட்ட முழுமுதற் சிவத்தின் நிலையிலும் வைத்து வணங்காமையும், அவ்வவரை அவ்வர்க் குரிய நிலையின்மட்டுமே வைத்து வணங்குதலும் ஆகும்.

கள்

கருவியும் புலனும் புரிவின்றி நிகழ' என்பதிற் கருவி யென்றது மெய்வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக்கருவிகள் ஐந்தனையும், புலனென்றது மனம், நினைவு (சித்தம்), அறிவு (புத்தி), முனைப்பு (அகங்காரம்) என்னும் அகவுணர்வு நான்கனையும்; புரிவு - அவா, விருப்பம்; “புரிமாண் புரவியர்” என்புழி (பரிபாடல், 19, 13) இப்பொருள் காண்க. கருவியும் புலனும் புரிவின்றி நிகழ்தலாவது: கண் முதலிய பொறிகளால் உணர்ந்த பொருள் களை ஒருவர் தமக்கும் பிறர்க்குந் தீங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/221&oldid=1586965" இலிருந்து மீள்விக்கப்பட்டது