உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

197

பயவாமுறையில் நுகர்தல்; பிறர்க்குரிய தொரு பொருள் காட்சிக்கு இனிதாதல்பற்றி அதனைப் பெரிதும் அவாவிஅதனைத் தாம் பற்றிக்கொள்ள முனைதல் ஒருவர்க்கு ஏதமாம்; மற்று, அங்ஙனம் பிறர்க்கு உரித்தாகாத தொன்றனைக் காள்ளுமுறையாற் கொண்டு நுகர்தல் ஏத முடைத்தன்றாம். இனி, மாயாவாத நூலாரும் அவரோடொத்தார் பிறருங், காள்ளு முறையிற் கொண்டு பொருள்களை நுகர்தலுங் குற்றம்; ஆதலாற், பொறிவழி உணர்வு செல்லாமல் முழுதும் அடக்குதலே வாய்மையாமெனக் கரையா நிற்பர். பொறிவழிச்செல்லும் உணர்வு அவ்வப் பொறிகளால் நுகர்தற்குரிய பண்டங்களை நுகருமுறையில் வைத்து நுகராக்கால், உயிர்கள் அறிவும் இன்பமும் எய்தாவாய் உணர்வில்லாக் கற்போல் ஆய்விடுமாகலின் அவர் கூற்றுப் பொருந்தாது; அல்லதூஉம், அங்ஙனங் கரையும் அவர்தாமுந் தாங் கரையுமாறே நடவாது, தாம் வேண்டுவன வெல்லாந் தாம் வேண்டுமட்டும் நுகர்ந்து செல்லக் காண்டலால், அவரது கோள் அவர்க்கே பயன்றராதாதலுந் தெரிந்து கொள்க. இவ்வுண்மை தேற்றுதற் கன்றே ஆசிரியர் திருமூலர்,

“அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை; அஞ்சும் அடக்கில் அசேதனமா மென்றிட் டஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே”

என்றருளிச் செய்ததூஉம் என்க.

(திருமந்திரம், 2033)

முழுமதியை இருகூறாகப் பிளந்து வைத்தாற்போற் காணப்படுதல் பற்றிப் பிறைமதி 'போழ்மதி' எனப்பட்டது.

(35-40) கொழும்குறை தன்மெயில் பலமுறைதடிந்தும் கொழுவிய தசையினைத் தன்உடம்பிலிருநது அறுத்து இட்டும், உறுப்பினை ஈர்ந்து நெறிப்பட வீசியும் உடம்பின் உறுப்புகளை அறுத்து முறையாய் எறிந்தும், பச்சிளம் குருதியை நச்சி உகுத்தும்

தனது உடம்பின் புதிய செவ்விய செந்நீரை விரும்பிச்சொரிந்தும், உயிர்ப்பலி வேள்வியில் கடன்பல கழிப்பி - உயிர்க்கிடமான உடம்பையே பலியாக இடும் வேள்வியிற் கிரியைகள் பலவும் முடித்து, அரிதின் முயன்ற பின்றையும்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/222&oldid=1586966" இலிருந்து மீள்விக்கப்பட்டது