உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் - 20 ×

கடுமையாகத் தவம் முயன்ற பின்னும், புரிசடைப் பெரியோன் போந்திலனாக- புரிந்த சடைமுடியை யுடைய பெரியோனான சிவபெருமான் முன் தோன்றிலனாக,

'கொழுங்குறை’, தசை, “காழிற் சுட்ட கோழூன் கொழுங் குறை” என்பது பொருருராற்றுப்படை (105). தடிந்து, அறுத்து, இப் பொருட்டாதல் பரிபாடலிற் (5,4) காண்க. அரியுந்தோறும் இறைவனருளால் வளர்தலிற் 'கொழுங்குறை' என்றார்.

செவ்விய நலன் வாய்ந்தமைந்த குருதியென்றற்குப் ‘பச்சிளங் குருதி' யெனப்பட்டது.

உயிர் நிற்றற்கிடனாகிய உடல் ஈண்டு உயிர் எனப்பட்டது; து “தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணும்” ஆகுபெயர் (தொல்காப்பியம், சொல், 116).

உடல் முதலிய எதனையும் ஒரு பொருளாகக் கருதாது வெறுக்குந் தனது துறவு நிலையைப் புலப்படுத்தும் பொருட்டும், மிகப் பருந் துன்பங்களை யெல்லாந் தான் ஏற்று வருந்துதலைக் காட்டு முகத்தால் இறைவனுக்கு ஒரு பேரிரக்கம் வருவித்தற் பொருட்டுஞ் சூரன் இத்தகைய கடுந்தவங்கள் புரிந்தானென்க. துன்பம் பொறுத்தலே தவத்திற் கடையாளம் என்னும் உண்மை,

"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு”

என்னுந் தெய்வத் திருக்குறளால் (261) நன்கு தெளியப்படும்.

உலகினர் பொருட்டாக எல்லாம்வல்ல கடவுள் தன் அடியவர் தன்பாற் காட்டும் அன்பின் றிறங்களெல்லாம் முற்றவும் புலனாம் வரையிற் காத்திருந்து, பின்னரே அவர்முன் எழுந்தருளி அவர்க்கு வேண்டும் பேறுகள் அருளுவனாகலின் இங்ஙனம் விரைவிற் போந்திலனென்றார். புரிசடை முறுக்குண்ட சடை (புறம்.135).

-

(40-51) எரிகிளர் தீ மிகுகின்ற, வேள்வி ஆற்றும் ஆழ்குழியின் வேள்வி செய்யும் ஆழ்ந்த வேள்விக் குழியில், வைநுனைய எழுநிlஇ கூரிய நுனியினையுடைய ய இருப்புத்தூணை நிறுத்தி, முழுஉடம்பும் பழுதுபடப் போழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/223&oldid=1586967" இலிருந்து மீள்விக்கப்பட்டது