உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

199

அரிய

-

படுத்துப் பொன்ற - சூரன் தனது முழுஉடம்பும் பழுதாகும்படி அதன்கட் பாய்தலாற் பிளந்தழித்து இறக்க, தம்பியர் பாய்வதற்கு ஊக்கிய காலை தம்பிமாரும் அங்ஙனமே பாய்ந்தழிவதற்கு முயன்றெழுந்த பொழுது, வேய் புரை பணைத்தோள் பாவையும் தானும் ஆங்கு எழுந்து- மூங்கிற் றண்டினை ஒக்கும் பருத்த தோள்களையுடைய உமைப்பிராட்டியுந் தானுமாக ஆங்கு விரைந்து தோன்றி வானவர் தலைவன் சீரிதின் அருளிய தேவர்கட்குத் தலைவனான சிவபெருமான் சிறப்பாக ஈந்தருளிய, வரம்பெறு பெருமையின் உரம் பெரிது எய்தி வரங்களைப் பெற்ற பெருமையினால் வலிமை மிக அடைந்து, நின் சிறு அடித்தாமரை வேறு இன்றி வைகும் அழியாப் பேற்றின் வழிவழிச்சிறந்த சூர் முதல்போலப் பேரன்பு இல்லேன் தேவரீருடைய சின்னஞ் சிறிய திருவடித் தாமரை மலர்களிற் பிரிவில்லாமற் பொருந்திவாழும் அழியாத திருவடிப்பேற்றின்கண் முறைமுறையே பெருமையடைந்து வரும் சூரர் தலைவனான சூரபதுமனைப்போல் ஏழையேன் பேரன்புடையேனல்லேன் என்பது,

-

-

வை, நுண்மை; நுனைய, குறிப்புப் பெயரெச்சம்; எழு - தூண்; சூரபதுமனுக்குத் தம்பியர் சிங்கமுகன் முதலியோர். சிவபிரான்பாற்சூரன் இங்ஙனமெல்லாந் தவங்கிடந்து பல பெறலரும் வரங்கள் பெற்ற வரலாறுகளெல்லாங் கந்தபுராணத்து அசுரர் யாகப் படலத்திலும் வரம்பெறுபடலத்திலுங் காண்க.

‘வானவர் தலைவன் தானும் பாவையும் ஆங்கெழுந்து’

எனக் கூட்டுக.

உரம், இங்குப் பெருமிதத்தின் வன்மையென்க.

‘சிறுமைஅடி' யென்பது 'சீறடி' யெனப் புணர்ந்ததாகலின், அது 'சிறிய திருவடி' யெனப் பொருள்படும். இறைவன் இளைஞ னாகலின் அதற்கேற்ப அவன்றிருவடி சீறடியெனப்பட்டது. 'சூர்' அச்சம், அதனை விளைக்கும் அசுரனுக்கு ஆனது ஆகுபெயர்; சூர்’ அச்சப்பொருட்டாதல் திவாகரத்திற் காண்க.

(52-66) ஆலவாய் அமர்ந்த அழல்நிறக் கடவுள் - திருவால வாயின் கண் திருக்கோயில்கொண் டெழுந்தருளியுள்ள தீமேனியுடைய சிவபிரானே, செந்தமிழ்வழக்கு முந்துநின்று சைப்ப. தொன்று தொட்டுவருஞ் செவ்விய தமிழ்வழக்கி

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/224&oldid=1586968" இலிருந்து மீள்விக்கப்பட்டது