உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் - 20

L

-

-

னியல்பினைத் தன் எதிரே வந்து நின்று சொல்லவும், கடாவிடை நிகழ்த்தும் தடாப்பெரும் பேறும் - இறைவன் வினவியவற்றிற்கு விடையாக அதனை மறுத்து உரை நிகழ்த்துந் தடுத்தற்கரிய பெரிய திறமைப்பேறும், இறைவன் கண்ட பொருள் வரம்பு அறிந்து கடவுள் அருளிச்செய்த களவியற் பொருளளவு தெரிந்து, சொல்நெறி மாட்சியும் சொல் லொழுங்கின் பருமையும், பொருள்நெறி மாட்சியும் - பொரு ளொழுங்கின் சிறப்பும், அளவையின் விளைவும் அவற்றை ஆராயும் அளவை முறைகளின் முடிபும், தெளிவுஉற விரித்து தெளிவு உண்டாகும்படி விரித்து விளக்கி, சுவைபெற உரைத்த நவை இல் புலமையும் சொற்சுவை பொருட்சுவை கெழும உரை கூறிய பழுதில்லாத புலமைப்பாடும், மறைப்பொருள் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து - நான்மறைகளின் உட்பொருட் குறிப்புகளை முறையாக ஆராய்ந்து, சிவனையே முதல் எனச் சிவணிய காட்சியும் - சிவபிரானையே முழுமுதற் கடவுளெனத் தெளிந்த அளாவிய அறிவும். சீரிதின் இயைந்த கீரன்போல செம்மையாகப் பொருந்திய நக்கீரதேவரை ஒப்ப, சொல்தொறும் சுரக்கும் அற்றம் இல் இன்பமும் ஒவ்வொன்றிலும் ஊற்றெடுக்குஞ் சோர்தலில்லாத இன்பமும், பட்டாங்கு கிளக்கும் முட்டுஅறு மாட்சியும் உள்ளதை உள்ளவாறே கிளந்துகூறுங் குறைவு நீங்கிய சிறப்பும், கல்நெஞ்சும் நெகிழ்த்தும் அன்புஉறு மொழியும் கல்லொக்கும் உள்ளங்களையும் உருக்குகின்ற அன்பு நிறைந்த சொற்களும், ஒரு வழிச் சிறப்ப வருமுறை கொளீஇ - ஒருங்கே மேம்பட வருகின்ற வகையினைப் பொருத்தி, ஆற்றுப்படை சொலும் ஆற்றலும் இல்லேன் தேவரீருக்குத் திருமுருகாற்றுப் படை போல்வதோர் ஆற்றுப்படை நவிலுந் திறமையும் இல்லேன்.

-

சால்

தருமிக்குப் பொற்கிழி யளித்தற்பொருட்டு ஆலவாய் அமர்ந்த அழல்நிறக் கடவுள் அமைத்துக்கொடுத்த அருந்தமிழ்ப் பாட்டிற்குத் தாங்கூறிய குற்றங் களைதற்கு அக்கடவுள் எதிர்தோன்றிய காலத்தும், நக்கீரர் நக்கீரர் வினாவிடைகளால் அஞ்சாது குற்றங் கூறியதான வரலாறு இங்குக் 'கடாவிடை நிகழ்த்தும்' என்னுந் தொடரினாற் குறிக்கப் பட்டிருக்கின்றது. இவ்வுண்மை திருவிளையாடற் புராணத்துள் தருமிக்குப் பொற்கிழி யளித்த படலத்தானுங், குறுந்தொகையின் முதற்செய்யுளானுந் தெளியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/225&oldid=1586969" இலிருந்து மீள்விக்கப்பட்டது