உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

201

செந்தமிழ் வழக்காவது பலவாற்றானும் உயர்ந்த இயல்புகள் வாய்ந்த நங்கையர் கூந்தல் மலரின் சேர்க்கையின்றியே நறுமணங் கமழ்த லுண்டென்னும் நல்லிசைப்புலவர் வழக்கு.

இறைவன் கண்ட பொருள் 'இறையனாரகப் பொருள்'. தமிழ் மொழியின்கண் இப்போது காணப்படும் உரைகளெல்லா வற்றுள்ளும் இறையனாரகப் பொருளுக்கு ஆசிரியர் நக்கீரனார் விரித்துரைத்த தெள்ளுதமிழுரையே எல்லாநலங்களும் ஒருங்கு கெழுமிச் சாலச்சிறந்து முதன்மைபெற்று விளங்குவதாதல் தமிழ்ச்சுவையறிந்தா ரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்றாம். இவ்வுண்மையினை அடிகளே தாம் இயற்றிய உவரா அமிழ்தன்ன அரிய உரைநடைநூல்களில் ஆசிரியர் நக்கீரனாரையே பலபடப் பாராட்டிக் கூறியிருத்தலே சான்றாகும். அவற்றுட் சில பகுதிகள் வருமாறு.

"சூத்திரங்களின் சொற்பொருளை விடாமல் அவற்றைக் களவிக்கொண்டே சென்று பேருரை விரிப்பார் ஆசிரியர் நக்கீரனாரைத் தவிர வேறொருவரைக் காண்டல் இயலாது.”

66

“நக்கீரனாரது உரை நெகிழவேண்டும் பதத்து நெகிழ்ந்தும், இறுகவேண்டும் பதத்து இறுகியும் நல்லிசைப் புலமை மலிந்த செய்யுட்போல்... எண்வகை மெய்ப்பாடு தோற்றுவிக்கும் எண்வகைச்சுவை வாய்ந்தது.

66

‘அவைக்களத்தே கேட்டார்ப் பிணிக்குந் தகைத்தான பேருரை நிகழ்த்தும் பேராற்றல் வாய்ந்தோர் தாங் கூறும் பொருளை வினாவும் விடையுமாய் வைத்துத் தருக்க நூன்முறை வழாது தொடர்புபடுத்து விளக்கிச்செல்லு மாறு போலவும்...... ஆசிரியர் நக்கீரனாரது உரை யினமைப்பும் பொலிந்து திகழ்கின்றது. இத்தகையதொரு விழுமிய அமைப்பு ஏனையுரையாசிரியர் எவரிடத்தும் முற்றக் காணப்படுகின்றிலது.

“ஆசிரியர் நக்கீரனார் விரித்த இவ்வுரைப் பகுதி தருக்க யைபுஞ்சொற்பொருளடுக்கு முடைத்தாய்ப் பாச்சுவை விராய உரை நடைத்தாய்ப் பண்டைக்காலச் செந்தமிழ் வளந்துறுமி அகன்று ஆழ்ந்து தெளிந்துநிற்றல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/226&oldid=1586970" இலிருந்து மீள்விக்கப்பட்டது