உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் - 20

"பளபளப்பான பலநிறச் சலவைக்கற்கள் அழுத்திப், பொன் மினுக்குப் பூசிப், பலபல அடுக்குமாடங்கள் உடைத்தாய் வான் முகடு அளாய்க், காண்பார் கண்ணுங் கருத்துங் கவரும் நீர்மைத் தாய் உயர்ந்தோங்கி நிற்கும் எழுநிலை மாடம்போல் ஆசிரியர் நக்கீரனாரதுரை நிவந்து நிற்றலும், அம் மாடத்தின் அருகே புல்வேய்ந்த குடிலும் ஓடு மூடியதொரு சிற்றிலும் ஏழமைத் தோற்ற முடையவாய்த் தாழ்ந்து நிற்றல்போல் ஏனையுரை யாசிரிய ருரைகள் பீடுகுறைந்து நிற்றலும் பிரிந்தினிது விளங்கா நிற்கும்.

66

66

“நக்கீரனார் சொற்றொடர்களை அமைக்கும் முறையோ... ஏனை உரைகாரர் அவற்றை அமைக்கும் முறைக்கு முற்றும் வேறான தொரு தன்மைத்தாய் இருக்கின்றது. ஒருபொருண்மேல் வரும் பல சொற்றொடர்களை அவர் ஒரு வரிசைப்படத் தொடுக்குந் திறமும் அழகும் பெரிது பாராட்டற்பாலவான தனிச்சிறப்பு வாய்ந்து மிளிர்கின்றன. சான்றோர்தம் முதுமொழிகளை இடையிடையே மடுத்து உரையெழுதுதலில் ஆசிரியர் நக்கீரனார் வேட்கை மிகுதியும் உடையராதல்போல் ஏனை உரைகாரர் இருப்பக் காணாமையின், அவ்விரு பாலார்க்குமுள்ள இயற்கை வேறுபாடுகளைப் பகுத்துணர்ந்து கடைப் பிடித்துக்கொள்க. (மாணிக்கவாசகர் காலம், 452 -463) என்பன காண்க. செந்தமிழ் வழக்கு முந்துநின் றிசைத்த வரலாறு: பாண்டிய னொருவன் மனைவி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேரழகு வாய்ந்தவள். அவளுடன் ஒருநாள் அவ்வரசன் தனது இளமரப் பூங்காவில் உலவுகையில் அவளது கூந்தல் அவிழ்ந்து காற்றில் அலைய அதன்கணிருந்து ஒருவகையான நறுமணங் கமகமவென்று கமழ்ந்தது. அதனை யுணர்ந்த அரசன் அக் கூந்தலின் மணம் பூவின் சேர்க்கையாலன்றி, அதன்கணின்றும் இயற்கையாய் எழுதல் கண்டு ‘மகளிர் கூந்தற்குப் பூவின் சேர்க்கையின்றி இயற்கையிலேயும் மணம் உண்டுகொல்!” என்று ஐயுற்றவனாய்த், தன் அவைக்களத்துள்ள புலவரை விளித்து, ‘மகளிர் கூந்தற்குள்ள சிறப்பு என்னை? என்று வினாவ, எவரும் அதற்கு விடை கூறமாட்டாராயினர். அதன்மேல் அவ்வரசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/227&oldid=1586971" இலிருந்து மீள்விக்கப்பட்டது