உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

203

பொன்பொதிந்த கிழியொன்றனைத் தனது அவையிலே தூக்கி, ‘மகளிர் கூந்தற்குள்ள இயற்கைச் சிறப்பினை நுவன்று எவர் ஒரு தமிழ்ச்செய்யுள் பாடித்தருவரோ அவர் இப்பொற்கிழியினைப் பெறுதற்குரியர்' என அறிவித்ததனன். வறியனான தருமி என்னும் ஓர் இளைஞ ளைஞன் அப் பொற்கிழியினைவேண்டி இறைவனைக் குறையிரப்ப, அவன் கையில் ஒரு தமிழ்ச்செய்யுள் வரைந்த நறுக்கொன்று வந்து வீழ்ந்தது. அதனை அவன் பாண்டியன்பாற் சென்றுகாட்ட, அதன்கண் உள்ள செய்யுட் பொருள் தான் வினாயதற்கு விடையாய் அமைந்திருத்தல் கண்டு பாண்டியன் அக்கிழியினை அவன் அறுத்தெடுத்துக் கொள்ளுமாறு ஏவ, அப்போது நக்கீரர் என்னும் புலவர் பெருந்தகை அச் செய்யுளிற் பொருட்குற்றம் உளதென்று கூறிமறுப்பத், தருமி கிழி பெறானாய்ப் பெரிதும் உளம் நைந்து இறைவனை நினைந்து அழ, உடனே அந்நேரத்தில் அவ்வவைக் களத்தில் ஒரு புலவன் வந்து தோன்றி, ‘எமது பாட்டிற்குக் குற்றஞ் சொன்னார் யாவர்?' என, உடனே நக்கீரர் ‘மகளிர் கூந்தற்குப் பூவும் பூவின் நெய்யுஞ் சேர்ந்தாலன்றி இயற்கையே அது மணம் உடைத்தாகாது. அங்ஙனம் இருக்கக், “கொங்குதேர் வாழ்க்கை” என்னும் நுமது செய்யுளிற்.

“செறி எயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே'

என மகளிர் கூந்தல் மலரினும் மிக்க இயற்கை மணம் டத்தென நீர் கூறியது குற்றமாம் என்றேம் யாம்' என்றனர். அதுகேட்ட அப்புலவர் ‘மகளிரிற் சிறந்த நங்கைமார் கூந்தற்கு இயற்கை மணம் உளதன்றோ?' எனவினவ, நக்கீரர் 'நங்கையர் கூந்தலும் பூ முதலியவற்றின் சேர்க்கையினாலேயே மணம் உடைத்தாம்' என விடை கூறினர். அதன்பின் அப்புலவர் ‘அரம்பை மாதரார் கூந்தல் இயற்கை மணம் உடைத்தன்றோ?' என வினவ, நக்கீரர் ‘அவரது கூந்தலும் இயற்கைமணம் உடைத்தன்று' என விடை யிறுப்பப், பின்னும் அப்புலவர் ‘நீர் வழிபடும் உமைப்பிராட்டியார் கூந்தலுஞ் செயற்கை மணந்தான் உடையதோ?' என, நக்கீரர் ‘அதுவும் அந் நீர்மையதே' என்று விடை நுவன்றனர். வந்த அப்புலவர் இறைவனே யாதலால் நக்கீரரின் செருக்கை அடக்குவான் கருதித் தமது நெற்றிக் கண் ணைத் திறக்க, அப்போதும் நக்கீரர் தமது பிழையுணராராய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/228&oldid=1586972" இலிருந்து மீள்விக்கப்பட்டது