உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் - 20

'நெற்றிக்கண்ணைக் காட்டினுங் குற்றங் குற்றமே' எனக் கரைந்தனர். இறைவன் உடனே மறைய, நக்கீரர் நெற்றிக்கண் வெப்பந் தாங்காமையால் ஒருகுளத்தில் இறங்கித், தாஞ்செய் பிழையினைப் பொறுக்கும்படி வேண்டி இறைவன்மேற் செந்தமிழ்ப்பாடல் பாடி யுருகப், பின்னர் இறைவன் அவர்க்கு அவ் வெப்பத்தினை நீக்கித், தன் படைப்பின் வியத்தகு அமைப்பின் றிறங்களையும், மக்களிற் சிறந்த நங்கைமார் கூந்தலும், அரம்பையர் கூந்தலும், உலகன்னையின் கூந்தலும் இயற்கைமணங் கமழும் வகைகளையும் நக்கீரர் நன்குணருமாறு தெருட்டினனென நம்பியார் திருவிளையாடல் கூறுதல் காண்க.

இறைவன் கண்டபொருள் என்பது இறையனாரகப் பொருள் என்னும் அகப்பொரு ளிலக்கணநூல்; அதற்குப் பேருரை வகுத்தவர் நக்கீரர்.

சிவணல் - அளவளாவல், பொருந்தல் (பிங்கலந்தை).

‘கீரன்' என்பது பெயர்; அது செந்தமிழ் வழக்கிற் சிறப்பு நோக்கி வரும் நகரமாகிய இடைச்சொல்லொடு சேர்ந்து ‘நப்பூதன்’ என்றற் றொடக்கத்தனபோல் ‘நக்கீரன்' என வழங்குவது; கீர் - சொல் (திவாகரம்); நக்கீரன் - நல்லசொல்லன் அல்லது சொல்வன்மையுடையன்.

1186).

‘அற்றம்' மெலிவு, சோர்வு (திருக்குறள் பரிமேலழகருரை,

‘பட்டாங்கு’,பட்டபடி, நிகழ்ந்தபடி, அதாவது உண்மை. ‘ஆற்றுப்படை' ஈண்டுத் திருமுருகாற்றுப்படை.

-

(67-74) ஆங்கு அதன் கருவாய் உள் உறை நுண்பொருள் அத் திருமுருகாற்றுப் படையின்கண் அதன் கருப்பொருளாய் அகத்தே கிடக்கும் நுட்பக் கருத்துகளை, விழுமிதின் எடுத்து வழுவு அற அமைத்து சிறப்பாகத் துருவி யெடுத்துக் குற்றம் இன்றாக அமைத்து, தொண்டர் ஆரத் தண்டாது கொடுத்து - ந்தமிழ்த் தெய்வத் தொண்டர்கள் நுகர்ந்து நிறையத் தணியாமற் கொடுத்து, நின் திருவடிக் கிடந்த பெருகிய அன்பினும் -நினது திருவடியின்கட் கிடந்த மிகுந்த அன்பினாலும், தமிழ் வரம்பு உணர்ந்த கமழுறும் அறிவினும் -செந்தமிழ் எல்லை தெளிந்த மணம் விளங்கிய அறிவினாலும், உரைத்திறம் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/229&oldid=1586973" இலிருந்து மீள்விக்கப்பட்டது