உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை *

-

205

யிடும் வரைப்படா விறலினும் உரைவன்மை நிலைகாணும் அளவுபடாத ஆற்றலினாலும், தானே தனக்கு நிகர் என விளங்கிய நச்சினார்க்கினியனும் அல்லேன் - தானே தனக்கு நிகர் என்னும்படி புகழ் விளங்கிய நச்சினார்க்கினியன் என்னும் உரையாசிரியனும் அல்லேன்;

‘கரு’, கருக்கொண்ட பொருள்; “என்னுளக் கருவை யான் கண்டிலேன் (திருவாசகம், திருச்சதகம், 41) என்னும்

அருண்மொழியைக் காண்க.

தண்டாது

குடுமி” புறம், 6.

-

தணியாது; "தண்டா ஈகைத் தகைமாண்

‘ஆர்தல்’ நுகர்தல், உண்ணுதல்; இச்சொல் இப்பொருட் டாகவே “மணமலர் ஆரும் இரும்பு திரித்தன்ன அறல் மருப்பு எருமை" என முன்னும் (1,15-6) வந்தமை நினைவுகூர்க.

L

உரைத்திறம் நிலையிடலாவது, தொல்லாசிரியர் பாட்டு கட்கு இதுவோ அதுவோவென ஏதும் நிலைப்படாமல் மயங்கக் கிடக்கும் பல்வேறு வகையான உரைப் பொருள்களில் வன்மையுள்ளது இதுவே யெனத் துணிந்து நூலாசிரியர் கருத்தை நிலையிடுதல் என்க. ஆசிரியர் நக்கீரனார் இயற்றிய திருமுரு காற்றுப்படைக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் எழுதிய உரையே இஞ்ஞான்றுஞ் சிறந்து விளங்குதல்கொண்டும் இது தெளியப்படும்.

-

(74-82) நிச்சலும் நாடோறும், வருக்கைச்சுளையும் பொருக்கரை மாவும் கொழுங்கனி வாழையுஞ் செழுஞ்சுவைக் கன்னலும் ஒருங்கு தலைமயங்கிய அரும்பெரும் கலவையின் பலாச்சுைைளயும் பொருக்கரை மாம்பழமுங் கொழுமையான வாழைக்கனியும் வளமான இனிய சுவையுள்ள சருக்கரையும் ஒன்றுசேர்ந்து கலந்த அருமை பெருமையுடைய இன்சுவைக் கூட்டை ஒப்ப, அருஞ்சொல் வழக்கமும் - அரிய செஞ்சொற் கோப்பும், திருந்திய நடையும் - திருத்தமான செய்யுள்நடையும், வண்ணவேற்றுமையும் பலப்பல வண்ணப்பாட்டுகளின் வகைகளும், தண் எனும் ஒழுக்கமும் அவற்றின் குளிர்ந்த ஓசைநடையும், ஒன்று நிரம்பிய குன்றாத் திருப்புகழ் வேறுவேறு இயம்பிய வீறு உறுதவத்தின் அருணகிரி எனும் பெரியனும் அல்லேன் - ஒருங்கு நிறைந்த நலங் குறையாத திருப்புகழ் என்னுந்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/230&oldid=1586974" இலிருந்து மீள்விக்கப்பட்டது