உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

-

மறைமலையம் - 20

தேவரீரது புகழ்மாலையைப் பலவேறு வகைப்படத் திருவாய் மலர்ந்தருளிய மேன்மைமிக்க தவப்பெருமையினை யுடைய அருணகிரிநாதர் என்னுஞ் சான்றோனும் அல்லேன்;

66

'நிச்சலும் இயம்பிய' வென்க; ‘நிச்ச’ எனுஞ் சொல் நாடோறும் என்னும் பொருட்டாதல் 'நிச்சமும் பெண்பாற்குரிய வென்ப என்னுந் தொல்காப்பியக்களவியற் சூத்திரத்திற் காண்க (8); ‘நிச்ச’ நிச்சல் எனத் திரிந்தது; 'நிச்சல் ஏத்து நெல்வாயிலார்" எனத் தேவாரத்தும் போந்தது; இச்சொல் வடமொழியிற் சென்று 'நித்ய' என வழங்கும்.

-

பொருக்கு தகட்டுவடிவாய் வெடிக்கும் வண்டல், மாமரத்தின் அடி அதுபோல் வெடித்திருத்தலிற் “பொருக்கரைமா' என்றார்; தனைப் பொரியரை யென்றுங்

கூறுப.

பலாச்சுளைபோல் ஒவ்வொரு சொல்லும் அடைவே பதிந்து நிற்றலும், மாங்கனிபோல் எல்லாச்சொல்லுந் திரண்டு ஒரு பொருண் மேலவாய் இனிமை பயந்து நிற்றலும், வாழையங்கனி சீப்புச்சீப்பாய்ப் பிரிந்து காணப்படுதல்போற் செய்யுடோறும் வண்ணங்கள் வேறு வேறாய்ப்பிரிந்து இனிது திகழ்தலுங், கரம்பின் பாகுபோல் அவ்வண்ணங்கள் குளிர்ந்த ஓசையினவாய் ஒழுகுதலும் நால்வேறுவமைகளாற் குறித்தார்.

வீறு சிறப்பு (திருக்குறள், 665): வீறு உறுதவம் - மேன்மேற் சிறக்குந் தவம்.

(83-88) நூல் இடை வைத்த வாலிய பொருளினும் நூல்களினிடையில் நூலாசிரியராற் பெய்து வைக்கப்பட்ட தூய பொருள்களையும், உரையிடை விரிந்த புரை அமை தெளிவினும்

அந்நூல்கட்கு உரையாசிரியர்களால் எழுதப்பட்ட உரைகளினுள் விரிந்துள்ள உயர்வு பொருந்திய தெளிவுணர் வினையும், கேட்போர் உணரப் பாற்பட வகுத்து பாடங்கேட்கும் மாணவர்கள் தெளிவாய் உணரும்படி அவற்றைப் பல பகுதிகளாக வகுத்துக்கொண்டு, நின்புகழ் அனைத்தும்தன்பெரு மதியின் தேவரீருடைய புகழ்தக்க இயல்புகளையெல்லாந்தமது அகன்ற அறிவினால் உளம்கொள விளக்கும் வளம் கெழு புலமை நாராயணன் எனும் குருவனும் அல்லேன் – அம்மாணவரின் உள்ளங் கொள்ளும் முறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/231&oldid=1586975" இலிருந்து மீள்விக்கப்பட்டது