உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

207

விளக்கவல்ல வளமைசான்ற புலமையினையுடைய நாராயணசாமிப் பிள் பிள்ளை ள யென்னுந் தமிழாசிரியனும் அல்லேன்;

'வாலிய’, இங்குத் (பிங்கலந்தை, 4058)

தூயவென்னும்

பொருட்டு;

பொருளினும் தெளிவினும் என்பன இரண்டன் றொகை; ‘புரை’ உயர்வின் மேலது. “புரை யுயர்வாகும்' (தொல்காப் பியம், சொல், 302).

புலமைக்கு வளமையாவது, ஐயமின்றித் தெளிதலுந் தெளிவுண்டாக விளக்குதலுமாகும்.

'நாராயணசாமிப் பிள்ளை' யென்பார் அடிகட்குச் செந்தமிழ் அறிவுறுத்திய தமிழாசிரியராவர். குருவன். ஆசிரியன்; 'வானோர் குருவனே போற்றி” எனத் திருவாசகத்தில் (5, 68) இச்சொல் இப்பொருட்டாய் வந்தது.

66

'குருசில்'

என்னுஞ் சொல்லுங் குருவென்னும் முதனிலையிற் னோன்றியதாகும். குரு = ஒளி, அறிவொளியை யுடையவன், அதனைத் தருபவன் குருவெனப் பட்டான். வடமொழிக்கட் சென்ற பல தமிழ்ச் சொற்களுள் இதுவும் ஒன்று.

(89-97) களவியல் தனக்குப் பலபட இயம்பி- ‘களவியல்' என

வழங்கும் இறையனாரகப் பொருளுக்குப் பல வகையாகப் பொருள்கூறி, பளகுஅறு நன்பொருள் தெளியாது உழன்ற புலவோர் களிப்ப நலமுறத் தோன்றி - அவற்றுட் குற்றம் நீங்கிய நல்லுரை ஈதெனத் தெளியமாட்டாமல் உள்ளம் அலைவுற்ற கடைச்சங்கப் புலவர்கள் தமது வருத்தம் நீங்கிக் களிக்குமாறு அவர்முன் நன்மையுண்டாக எழுந்தருளிவந்து, மெய்ப்பொருள் காட்டித் தமிழ் வழிப்படுத்தும் - உண்மையுரை இதுவேயென ஆசிரியர் நக்கீரதேவர் எழுதிய உரையைக் காட்டுவித்து அகத்தமிழ்ப் பொருளை ஒரு வழிப்படுத்தியும், புல் அமண் மிகுந்து நல்உணர்வு அழிந்து- முழுமுதற் கடவுளிருப்பை உணராமையின் இழிபுற்ற சமண் சமயம் பரவி இறைமுதற் பொருளறிவு வாய்ந்த சைவசமய நல்லுணர்வு கெட்டு, பெரும் பெயர் வழுதியும் அருந்தமிழ்க் கூடலும் உய்வழி காணாது உழிதருகாலை - பெரிய புகழ்வாய்ந்த பாண்டிமன்னனும் அரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/232&oldid=1586976" இலிருந்து மீள்விக்கப்பட்டது