உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

  • மறைமலையம் - 20

செந்தமிழ்ப்பயிற்சி மிக்க மதுரையம்பதியும் நன்னெறிப்பட்டு உய்யும் வகைகள் காணாமல் அலைவுற்றுக் கிடந்தபொழுது, ஒய் எனப் போந்து மெய் நெறி காட்டியும் - திருஞானசம்பந்தப் பெருமானாக விரைந்து வந்து தோன்றிச் சைவமெனப்படும் மெய்வழி தேற்றி விளக்கியருளியும், தண் அருள் புரிந்த நின்னே -போல இனிய திருவருள் செய்த தேவரீரே போல;

இறைவ னருளாற் பெற்ற இறையனாராகப் பொருள் என்னும் அகத்தமி ழிலக்கணத்திற்கு அஞ்ஞான்றைப் புலவர் பலருங் கண்ட உரைகளுள் நக்கீரனாருரையே சிறந்ததெனப் புலப்படுத்திய உருத்திரசன்மர் முருகப்பிரான் பிறவியே யென்னும் அக்களவியல் உரைப்பாயிரம்.

தன், சாரியை; பளகு, குற்றம்; “பளகறுத்துடையான் கழல் பணிந்திலை” (திருவாசகம், திருச்சதகம், 35) என்பதிற்போல.

'ஒய்', விரைவுப்பொருளது; இஃதிப்பொருட்டாதல் "நுங்கையது கேளா வளவை யொய் யென’ என்னும்

பொருநராற்றுப் படை (152) யடியிற் காணப்படும்.

‘நின்னே’, ஏகாரம் தேற்றம்; இங்குக் கூறப்படும் பாண்டிய மன்னன் நெடுமாறன் என்னுங் கூன்பாண்டிய னாவன்.

முருகப்பெருமானே திருஞானசம்பந்தப் பெருமானாக எழுந்தருளிவந்து பாண்டிநாட்டுக்குச் சென்று அமண் அழித்துச் செந்தமிழ்த் தேவாரத்தாற் சைவம் விளக்கியருளினாரென்று நம்பியாண்டார் நம்பிகள், “மயிலேந்திய வள்ளல் தன்னை யளிப்ப மதிபுணர்ந்த எயிலேந்திய சண்பை நாதன்” என்றற் றொடக்கத்துச் செய்யுட்களில் நுவலுதல் காண்க (திருஞான சம்பந்தர் திருவந்தாதி,64.)

(98-108) செந்தமிழ் வழக்கு முந்துற விரித்து - செந்தமிழ் மொழியின் இலக்கண இலக்கிய வழக்குமுறைகளை முதலில் விரித்து விளங்கச்செய்து, விடி ஞாயிறு என - விடியற்காலத்தில் எழுகின்ற பகலவனைப்போல, முடிநிலைச் சைவம் ஏனை எல்லாச்சமயங்கட்கும் முடிந்த நிலையில் வீற்றிருப்பதான உயர்ந்த சைவசமயத்தின், பைம் கதிர் விரித்து புதியவான அறிவொளி களை எங்கும் விரித்து, கங்குலில் கூம்பிய விரை அவிழ்தாமரை புரை உரவோர் உளம் புரிஞெகிழ்ந்து அலரத் தரும் இயல் சிறப்ப இரவின்கட் குவிந்த மணம் பரப்புந் தகையவான தாமரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/233&oldid=1586977" இலிருந்து மீள்விக்கப்பட்டது