உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

209

மொட்டுகளை ஒக்கும் அறிஞர் உள்ளங்கள் கட்டவிழ்ந்து மலரும்படி செய்யும் ஆற்றல் சிறந்துதோன்ற, உரையினும் கருத்தினும் வரை அமை நோக்கினும் பொருந்தக் காட்டி வருந்திறன் மிகுத்து - சொல்லாலும் அச்சொல்லின் கருத்தாலும் அளவமைந்த நோக்காலும் பொருத்தமாக விளக்கி வரும் வலிமை யினை மிகுத்துக்கொண்டு மலைவுபடும் உள்ளத்து அறிவொடு கூடாச் சிறுபுன் மாந்தர் குறுமொழி களைந்து - முன்பின் அறிவு மாறுபடும் உள்ளங்களை யுடைமையின் மெய்யறிவொடு பொருந்தாத சிறியரான இழிந்த மக்களின் சிறு சொற்களை நீக்கி, நின் புகழ் விரிக்கும் அன்பில் சிறந்த சோமசுந்தர குருவனும் அல்லேன் தேவரீருடைய ய அருட்புகழ்களையே விரித்துரைக்கும் பேரன் பிற் சிறந்த சோமசுந்தர ஆசிரியனும் அல்லேன்;

செந்தமிழ் நூல் அறிவினின்றி அந்நூலின்கட் செறித் துணர்த்தப்பட்டிருக்கும் முடிநிலைச் சைவவுண்மைகளை விளக்குதல் ஏலாதாகலின், 'செந்தமிழ் வழக்கு முந்துற விரிப்’பா ராயினரென்பது.

தகுதி வாய்ந்த மக்கட்கன்றி ஏனையோர்க்குச் சமய வறிவுநூற் பொருள் அறிவுறுக்கப் படாவாகலின், அங்ஙனந் தகுதி வாய்ந்து கேட்பாரை ஏனைத் தகுதியில்லா மக்களினின்றும் வேறு பிரித்துச் சிறப்பித்தல் வேண்டுமாகலின் அவர் ‘உரவோர்’ என்றும், அவரது நல்லுள்ளம் 'விரையவிழ் தாமரை’ யென்றுஞ் சிறப்பிக்கப்பட்டன. ஆயினும் அவரச்சமயவறிவுநூற் பொருள் களை ஆராய்ச்சி முறையிற் கேட்டு அருள்மணம் விரியப் பெறாமையின், அவருடைய தகுதி வாய்ந்த விழுமிய உள்ளங்கள் மலருந் தகுதியி லுள்ள முகைகளை ஒப்பவே உள்ளனவென்றற்குக் "கங்குலிற் கூம்பிய விரையவிழ் தாமரை புரை உரவோர் உளம்' எனப்பட்டது. இவ்வரிய உவமைகளின் நுட்ப அழகு இங்குப் பெரிதும் உள்ளுணர்ந்து மகிழற் பாலதாகுமென்க.

உரையினும் கருத்தினும் நோக்கினு மென்பவற்றிற்கு மூன்றனுருபு விரித்துக்கொள்க; உரை-சொல்; கருத்து சொற்பொருள்; நோக்கு பொருளை நுனித்துக் காண்டல்.

-

'சிறுபுன் மாந்தர்’ ஏனைச் சமயத்தவர்; குறுமொழி, அவரது பொருள் நிரம்பாச் சிறுமையுடைய சொல், முடிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/234&oldid=1586978" இலிருந்து மீள்விக்கப்பட்டது