உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

❖ 20* மறைமலையம் - 20

-

-

மூ

-

(102-108) ஒரு சார் மற்றொரு பக்கத்தில், பனிமலை நிவந்த பண்புபோல - பனியினால் மூடப்பட்ட மலைகள் உயர்ந்துள்ள தன்மையை ஒப்ப, சேண்தொட ஓங்கிய உப்புக் குன்றம் - வானம் தொடும் படி உயர்ந்த உப்பு மலைகளை, தலையழித்து உமணர் பொதியுறச் சேர்த்திய உச்சியிலிருந்து அவற்றை யழித்து உப்பு வாணிகர் உப்பை மூட்டைகளாக்கிச் சேர்த்த, ஒழுகை வண்டியின், உருளை - சக்கரங்கள், முழுமணல் புதைதலின் சுமையினால் அவ்விடத்து நிறைந்த மணலினுள் அழுந்துதலின், பிடர்கொடுத்து எழுப்பிக் கடும்பகடு உரப்பும் - அவற்றைத் தம் புறங்கழுத்துக் கொடுத்து மேல்தூக்கியபடியாய் அவ்வண்டியிற் பூட்டிய வலிய எருதுகளை வாயால் அதட்டுகின்ற, தாளாண் மாக்கள் தலைப் படும் உஞற்றும் - முயற்சியிற் சிறந்த மக்களின் மேம்படும் உழப்பும்.

நிவந்த - உயர்ந்த, "மாக்கடல் நிவந்து எழுதருஞ், செஞ் ஞாயிற்றுக் கவினை” என்றார் புறத்திலும் (4).

‘சேண்' ஆகுபெயராய் வானத்தை உணர்த்தும்; ‘சேர்த்திய’, ‘செய்த’ வென்னும் பெயரெச்சத் திரிபு. உமணர் - உப்பு விற்பார்; 'ஒழுகை',வண்டி; ‘ஒழுகை’, வண்டி; இச்சொற்களுக்கு இப்பொருளுண்மை “நோன் பகட்டுமண ரொழுகையொடுவந்த” என்னுஞ் சிறுபாணாற்றுப் படை (55) யிற் காண்க.

'கடும்பகடு' என்புழிக் கடுமை வலிமையை யுணர்த்தா நின்றது. 'நெய்தல்’ நிலமாகலின், கழியிடத்து மணலில் உருளை கள் புதைதல் கூறப்பட்டது.

'தாள்' முயற்சி; 'தலைப்படும்' என்பதை இங்குச் 'செய்யு' மென்னும் எச்சமாகக் கொள்க. 'தாளாண்மாக்கள்' என்றது ஈண்டுவண்டி யோட்டுவாரை.

‘உஞற்று’ முயற்சி; மாண்ட உஞற்றிலவர்க்கு” (64) என்பது திருக்குறள்.

(109-112) புலவுக் கழி முளைத்த துவர் இதழ்த் தாமரை - புலால்நாற்றம் நாறுகின்ற கழியின்கண் வளர்ந்த சிவந்த இதழ்களையுடைய செந்தாமரை மலரில், புன்னை நுண்தாது பொறிப்ப புன்னை மலரின் பொன்னிறமான நுண்ணிய மகரந்தப்பொடிகள் மேலிருந்து சிந்த, துன்னிய உரு விளங்கும் தோற்றம்

-

வாடு

-

அஃது அப்பொடிகளால், நிறைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/253&oldid=1586997" இலிருந்து மீள்விக்கப்பட்டது