உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

227

கயன்மீன்களாகிய கண்கள் தன் இருபுறமும் புரளுகின்ற அழகிய முகத்தையுடைய அவர்தம் நெய்தல் நிலத்துப் பெண்டிர், கொடிச்சி தந்த கடுப்புடை நறவும் - குறிஞ்சி நிலத்துப் பெண்கள் கொணர்ந்து கொடுத்த கடுத்தலையுடைய கள்ளும், குடத்தி காணர்ந்த பலப்படு முதிரையும் - முல்லைநிலத்துப் பெண்டிர் கொண்டுவந்து தந்த அவரை காராமணி முதலிய பலவாகிய பயறுவகைகளும், உழத்தி எடுத்த விழுத்தகு பழனும் - மருதநில மகளிர் சுமந்துவந்த சிறப்புமிக்க வாழை முதலிய பழங்களும், பெறுவிலையாக தாம் பெறுகின்ற விலைப் பொருளாக, சிறுமீன் நொடுத்தும் - அவற்றிற்கு ஈடாகத் தம் நிலத்து வளங் களாகிய சிறிய மீன்களை விற்றும், இடைஇடை முத்தம் புடைபுடை அளந்தும் அதனோடு அதனிடையிடையே முத்துக் களை பக்கங்கடோறும் அளந்து கொடுத்தும், கோடுகொண்டு பீடுஉற மாறியும் சங்குகளை யெடுத்துப் பெருமைபெற மாற்றிக்கொண்டும், ஒருசார் பேர்ஒலி நிகழ்த்த இங்ஙனமாக ஒருபக்கத்தில் இப் பண்டமாற்றுப் பேரோசையை விளைக்க;

-

-

-

எக்கர் - மணற்குன்று (புறநானூறு,177).

குறுமொழி; “பிறரை யிகழ்ந்துபேசுஞ்சொல்' என்பர் அடியார்க்குநல்லார் (சிலப்பதிகாரம், 6, 63).

‘மாக்க” ளெனப்பட்டார் அவர்

'மக்க'ளென்னாது 'மாக்க'

சிறுசொற்பேசுதலின்.

‘திரை’ ஆகுபெயர் வீழ் - விரும்பப்படும்; “தாம் வீழ்வார் மென்றோள்' என்புழிப்போல (திருக்குறள்). 'மணி’ ஈண்டு முத்து மணிகளையுடைய சிப்பியினை யுணர்த்தியது ஆகுபெயர்.

‘குவையினர்’ முற்றெச்சம்; செல்ல, கடல்படு பொருள் களைக் கரையிற் கொணர்ந்து குவித்தப்படியாய் நீருக்குங் கரைக்குஞ் சென்று கொண்டிருக்க வென்க.

"தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்" (புறநானூறு, 392) என்பதனால் ஈண்டுக் கூறிய நறவின் கடுப்புத் தேளின் கடுப்பை யுடை ய தாதல் அறிக. நறவு- கள், “நனைமுதிர் சாடி நறவின் என்றார் புறத்திலும், (297). நொடுத்தல் - விற்றல், “மீன்நொடுத்து நெற்குவைஇ” (பறம், 343). புடை -பக்கம், “ஒருபுடை பாம்பு கொளினும்" (நாலடியார்,148).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/252&oldid=1586996" இலிருந்து மீள்விக்கப்பட்டது